“வலிமை“ வாய்ப்பு கை நழுவியது ஏமாற்றம்.. இன்னும் பெரிய வாய்ப்பு வரும்.. நடிகர் பிரசன்னா ட்வீட் !

சென்னை : வலிமை பட வாய்ப்பு கை நழுவியது குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திகேயா கும்மகொண்டா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வில்லனாக பிரசன்னா

வில்லனாக பிரசன்னா

வலிமை பட இயக்குனர் ஹெச் வினோத் கடந்த ஆண்டு அளித்த பேட்டியில், இப்படத்தின் கதையை அஜித்திட்டம் கூறிய போது நன்றாக இருக்கு என்றார். மேலும், வில்லன் கதாபாத்திரத்திற்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னதா ஹெச் வினோத் தெரிவித்து இருந்தார்.

நானும் காத்திருக்கிறேன்

நானும் காத்திருக்கிறேன்

வலிமை படத்தில் பிரசன்னா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் அதனை உறுதி செய்யவில்லை. மேலும், ட்விட்டர் தளத்தில் பிரசன்னாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, வலிமை படத்தில் நடிக்கிறீர்களா பதிலளியுங்கள் அண்ணா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை ப்ரோ. உங்களைப் போல தகவலுக்காக நானும் காத்திருக்கிறேன் என்று பதிலளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

ஏமாற்றம் அளிக்கிறது

ஏமாற்றம் அளிக்கிறது

இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், என் அன்பான தல என்னை நம்பியதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வலிமை வாய்ப்பு நழுவியபோது ஏமாற்றமாக இருந்தாலும், இன்னும் பெரிய விஷயங்கள் வரும் என்று நான் நம்புகிறேன் என்று வருத்தத்துடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதில், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, குர்பானி, புகழ், அச்சியூத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கிறார். போனி கபூர் ஏற்கனவே அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X