என் முன்னாடியே சினேகாவிடம் இப்படியா?.. செய்தியாளரிடம் நாக்கை கடித்த கணவர் பிரசன்னா?.. என்ன ஆனது?

சென்னை: நடிகை சினேகா திரைத்துறையிலிருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்தார். பிறகு விஜய் நடித்த கோட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். நடிப்பு மட்டுமின்றி தனியாக தொழிலும் செய்துவருகிறார் அவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா கொடுத்த ரியாக்‌ஷன் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் சினேகா. ஆனால் அதற்கும் முன்னதாகவே மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படம் வெளியாகிவிட்டதால் அதுதான் திரையில் வெளியான சினேகாவின் முதல் படமாக கருதப்படுகிறது. இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றாலும்; சினேகாவின் அழகும், முக்கியமாக அவரது புன்னகையும் ரசிகர்களிடம் அவரை எளிதாக கொண்டு சேர்த்தது.

டாப் ஹீரோயின்: முதல் இரண்டு படங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதன்படி ஆனந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, போஸ், வசீகரா, ஜனா, ஆட்டோகிராஃப், பிரிவோம் சந்திப்போ, பள்ளிக்கூடம் என பல படங்களில் நடித்தார். அவர் நடித்த எந்தப் படத்திலும் அதீத கிளாமர் காட்சிகளில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிளாமர் காட்டாமலும் திரைத்துறையில் ஜொலிக்கலாம் என்றும் நிரூபித்துக்காட்டியவர் அவர்.

Prasanna Funny Reaction to a Reporter s Question About Sneha age Goes Viral
Photo Credit:

பிரசன்னாவுடன் திருமணம்: அவர் தனது கரியரில் பீக்கில் இருந்தபோதே நடிகர் பிரசன்னாவை காதலிக்க ஆரம்பித்தார். இரண்டு பேரின் திருமணத்துக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் செம ஹேப்பியாக வாழ்ந்துவரும் அவர்; இடையில் சில காலம் திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

கோட்டில் ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார் புன்னகை அரசி. ஆனால் படம் சுமார்தான். இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க சினேகாலயா என்ற புடவை கடை ஒன்றையும் அண்மையில் தொடங்கியிருந்தார். அதுமட்டுமின்றி தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராகவும் இருக்கிறார். இப்படி தன்னை பிஸியாகவே வைத்திருக்கிறார் அவர்.

பிரசன்னாவின் ரியாக்‌ஷன்: இந்நிலையில் சினேகாலயா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், 'நீங்கள் எப்போதுமே ராணியாக இருக்கிறீர்கள். வயது என்பது வெறும் எண்தானா' என்று கேள்வி கேட்க; அருகில் இருந்த பிரசன்னா அந்த செய்தியாளரை நோக்கி சிரித்தபடியே, ஏய் என்று சொல்லி நாக்கை கடித்து கொன்றுவிடுவேன் என்பது மாதிரி செய்கை காண்பித்தார். அது அங்கிருந்த அனைவரிடமும் கலகலப்பை உண்டு பண்ணியது. அதனைத் தொடர்ந்து பேசிய சினேகா மனதால் சந்தோஷமாக இருந்தால்தான் முகத்தில் தெரியும். அதற்காக பிரசன்னாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X