இவரு மட்டும் விஜய்க்கு வில்லனாக நடிச்சா வேறலெவலில் இருக்கும்.. ரசிகரின் ட்வீட்டுகு பிரசன்னா பதில்!

சென்னை: சாக்லெட் பாய் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் பிரசன்னா தன்னால் வில்லனாகவும் மிரட்ட முடியும் என்பதை தனது வெரைட்டியான நடிப்பாற்றலை காட்டி நிரூபித்துள்ளார்.

அஞ்சாதே, திருட்டுப்பயலே 2, மாஃபியா உள்ளிட்ட படங்களில் பிரசன்னாவின் வில்லத்தனம் வெறித்தனத்தின் உச்சமாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ரசிகர் ஒருவரின் கோரிக்கைக்கு நடிகர் பிரசன்னா பதிவிட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

க்யூட்டான ஹீரோ

க்யூட்டான ஹீரோ

சுசி கணேசன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படம் மூலம் தமிழ் சினிமாவில் க்யூட்டான ஹீரோவாக அறிமுகமானவர் பிரசன்னா. அழகிய தீயே, கண்ட நாள் முதல், சாது மிரண்டால், அஞ்சாதே, நாணயம், முரண், சென்னையில் ஒரு நாள், பா பண்டி, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட ஏகப்பட்ட படன்களில் தனது அழகான மற்றும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்.

திருட்டுப்பயலே டு ஃபிங்கர் டிப்

திருட்டுப்பயலே டு ஃபிங்கர் டிப்

திருட்டுப்பயலே படத்தில் அமலா பாலையும் பாபி சிம்ஹாவையும் டெக் ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு அலற விட்டு இருப்பார் நடிகர் பிரசன்னா. சமீபத்தில் வெளியான ஃபிங்கர்டிப் வெப்சீரிஸில் அப்படியே டோட்டலாக பாபி சிம்ஹா ரோலை இவர் எடுத்து நடித்தது போல, டெக்னாலாஜி மூலம் தப்பு செய்பவர்களை டெக்னாலாஜி தெரிந்த எக்லிப்ஸின் துணை கொண்டு கண்டு பிடிக்கும் காட்சிகளும், கடைசியில், அந்த எக்லிப்ஸ் யார் என்பதை கண்டறியும் காட்சிகளிலும் கலக்கி இருப்பார்.

அஜித் படத்தில்

அஜித் படத்தில்

மாஃபியா படத்தில் வில்லன் ரோலில் மிரட்டிய நடிகர் பிரசன்னா நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் அமையாத நிலையில், அஜித்துக்கு வில்லனாக நடிக்கவில்லை. வலிமை படத்தில் கார்த்திகேயாவுக்கு பதிலாக பிரசன்னா வில்லனாக நடித்திருந்தால் படம் வேறலெவலில் இருந்து இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

விஜய்க்கு வில்லன்

விஜய்க்கு வில்லன்

ஃபிங்கர்டிப் வெப்சீரிஸை பார்த்த பலரும் நடிகர் பிரசன்னாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு போலீஸ் அதிகாரியாக எப்படி கேஷுவலாக இருப்பார். அதே நேரத்தில் தனது காரியத்தில் கண்ணாக இருப்பார் என்பதை அப்படியே கண் முன் காட்டி கலக்கி இருந்தார் பிரசன்னா. இந்நிலையில், ரசிகர் ஒருவர், நடிகர் விஜய்க்கு வில்லனாக நீங்க ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை வெளிப்படுத்த, கட்டாயம் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் பண்ணலாம் ப்ரோ எனக் கூறியுள்ளார்.

Recommended Video

GV prakash and Thalaivasal Vijay Speech at Yaanai Audio Launch *Kollywood
துப்பறிவாளன் 2

துப்பறிவாளன் 2

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் பிரசன்னா பிரமாதப்படுத்தி இருந்தார். துப்பறிவாளன் 2ம் பாகத்தில் இருந்து மிஷ்கின் வெளியான நிலையில், விஷாலே அந்த படத்தை இயக்கி வருகிறார். இரண்டாம் பாகத்திலும் பிரசன்னாவின் கதாபாத்திரம் வெயிட்டாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு நடுவே லத்தி உள்ளிட்ட வேறு சில படங்களிலும் விஷால் பிசியாகி உள்ள நிலையில், துப்பறிவாளன் 2 எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X