twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீட் தேர்வு எழுதுவோரின் பயண செலவை ஏற்கிறேன், விபரம் கொடுங்க: நடிகர் பிரசன்னா

    By Siva
    |

    Recommended Video

    வேறு மாநிலத்தில் நீட் எழுதும் மாணவர்களுக்காக உதவிக்கரம் நீட்டும் மக்கள்!- வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களில் குறைந்தது 2 பேரின் பயணச் செலவையாவது ஏற்கிறேன் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே நீட் தேர்வை எதிர்த்து போராடி ஓய்ந்து போயுள்ள தமிழக மாணவர்களுக்கு தலையில் இடி இறங்கியுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வசதி உள்ளவர்கள் செல்வார்கள் இல்லாத ஏழை பிள்ளைகள் எப்படி பயணம் செய்வது என்று தெரியாமல் இடிந்துபோய் உள்ளனர்.

    நீட்

    இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் அல்லது வசதி இல்லாத மாணவர்களில் குறைந்தது 2 பேரின் பயண செலவை ஏற்க விரும்புகிறேன். ஹால் டிக்கெட், தேர்வு மைய விபரங்களை எனக்கு இன்பாக்ஸ் செய்யுங்கள், உங்களுக்கு டிக்கெட் புக் செய்கிறேன் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

    வாழ்த்து

    நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள பிரசன்னாவின் நல்ல மனதை பாராட்டி பலரும் ட்வீட்டுகிறார்கள். பிரசன்னா போன்று பிற நடிகர்களும் உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும்.

    உதவி

    நீட் தேர்வு எழுதுவோருக்கு உதவ ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் தமிழ் சங்கம் முன்வந்துள்ளது. போக்குவரத்து, உணவு, இருக்கும் இடம் என அனைத்துக்கும் உதவுகிறது. ராஜஸ்தான் செல்லும் மாணவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும் என வாசுகி பாஸ்கர் ட்வீட்டியுள்ளார்.

    உதவி வேண்டுவோர் இவர்களை அணுகலாம்

    முருகானந்தம் 9790783187
    சவுந்தரவள்ளி 8696922117
    பாரதி 7357023549

    பா. ரஞ்சித்

    #நீட்தேர்வு மாணவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அநீதி. நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிவந்த மாணவர்கள், இன்று எங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்ற கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய அரசும் அதன் நிழல் போல இருக்கும் மாநில அரசும் தான்!! என இயக்குனர் பா. ரஞ்சித் கொந்தளித்துள்ளார்.

    English summary
    Actor Prasanna tweeted that, 'Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X