கண்ணு பட போகுது சுத்தி போடுங்க.. காதலர் தினத்தில் சினேகாவுக்கு உருக்கமாக வாழ்த்து சொன்ன பிரச்சனா!
சென்னை : காதலர் தினத்தில் நடிகர் பிரசன்னா அழகான புகைப்படங்களை வெளியிட்டு சினேகாவுக்கு உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை சினேகா தனது அழகான சிரிப்பால் ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி என பெயர் எடுத்தார். மலையாளம் படம் மூலம் சினிமாவில் நடிக்க சினேகா என்னவளே மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.
வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம், ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல ஹிட்படங்களில் நடித்த முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

நடிகை சினேகா
பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது காதலில் விழுந்தார். ஆரம்பத்தில் நட்பாக பழகத் தொடங்கிய இவர்கள் பின் காதலர்களாக மாறினார்கள். அதன்பின் 2011ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

க்யூட் பேமிலி
பிரசன்னா, சினேகா தம்பதிகளுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னா சினேகா இருவரும் தீபாவளி , பொங்கல் என எந்த விசேஷமாக இருந்தாலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அவள் என் இதயம்
இந்நிலையில் காதலர் தினமான இன்று, நடிகர் பிரசன்னா சினேகாவுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவள் பெண் மட்டுமல்ல. அவள் என் பெண், என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என் கூடு மற்றும் மற்ற அனைத்தும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், கண்ணு பட போகுது சுத்தி போடுங்க என இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விவாகரத்து வதந்தி
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றும் செய்திகள் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீ போல பரவியது. இந்த செய்தியை பார்த்து பதறிப்போன சினேகா, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











