சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு மோசமாக விமர்சித்தவருக்கு பிரசன்னா நெத்தியடி
Recommended Video

சென்னை: தன்னை தரக்குறைவாக பேசியவருக்கு நடிகர் பிரசன்னா அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த சிவகார்த்திகேயன் சொப்பன சுந்தரிகளை வாழ்த்தினார்.
ஒரு காலத்தில் சிவா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போது அந்த நிகழ்ச்சிக்கு பிரசன்னா சிறப்பு விருந்தினராக சென்றார். தற்போது பிரசன்னா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு சிவா சிறப்பு விருந்தினராக வந்ததை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் சுட்டிக் காட்டினார்.
சிவகார்த்திகேயன்
சிவா, பிரசன்னா பற்றிய பேச்சு கிளம்பியபோது ஒருவர் ட்வீட்டியதாவது, சிவகார்த்திகேயன் திறமையான நிகழ்ச்சி தொகுப்பாளர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திறன் பிரசன்னாவுக்கு அவ்வளவாக இல்லை. பிரசன்னா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பார்க்க போர் அடிக்கிறது. பிரசன்னா சுமாரான நடிகர், அவர் பெரிதாக வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சிவா என்றார்.
பதில்
தன்னை பற்றி விமரச்சித்து வெளியிடப்பட்ட ட்வீட்டை பார்த்த பிரசன்னா பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் போர் அடிக்கும் ஆங்கராக இருந்தால் இருந்துவிட்டு போகிறேன். இதை நான் ஃபுல்டைம் வேலையாக செய்யவில்லை. நான் சுமாரான நடிகர் என்றால் என்னை மேம்படுத்திக் கொள்ள ஸ்கோப் உள்ளது. வெற்றி பெறவில்லை என்றால் வெல்ல நேரம் உள்ளது. வெற்றி பெற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரம் ஆகும். வெறுப்பையோ, அன்பையோ பெற ஒரு நொடி தான் ஆகும். ஒரு நாள் உங்களின் அன்பையும் பெறுவேன் என்று பெருந்தன்மையாக தெரிவித்துள்ளார்.
ராதிகா
பிரசன்னாவின் ட்வீட்டை பார்த்த ராதிகா சரத்குமார் அவரை பாராட்டிவிட்டு இது போன்ற ஆட்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார். வாணிம்மா சொன்னால் கரெக்டாத் தான் இருக்கும்.

தெளிவு
பிரசன்னா எப்படி நடிப்பார் என்று அனைவருக்கும் தெரியும். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர் அவர். நடிப்பால் மக்களின் மனதை கவர்ந்த பிரசன்னா தனது நிதானமான பதிலால் பாராட்டுக்குரியவர் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











