அழகான மண்ணுதான்.. அதுக்கேத்த ஃபன்னுதான்... பீச்சில் மகன் கணவரோடு.. சினேகா செம உற்சாகம்!
Recommended Video
சென்னை: தமிழ் திரையுலகின் வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றான பிரசன்னா, சினேகா ஜோடி தற்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
சினிமா விளம்பரங்களில் நடித்த நேரம் போக அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தை அவர்கள் தங்களுடைய மகனுடன் செலவிட்டு ஜாலியாக அனுபவித்து வருகின்றனர். தற்போது சென்னையில் நல்ல வானிலை நிலவுவதால் கடலோரத்தில் அந்த இயற்கை அழகை ரசித்தபடி குடும்பத்துடன் என்ஜாய் செய்தார்கள். அந்த சந்தோஷ தருணத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிநேகா, பின்பு லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வந்தார். இவர் தொடர்ந்து கமல், அஜீத், விஜய், மாதவன், என முன்னணி நடிகர்களோடு நடித்து புன்னகை அரசியாக வலம் வரத் தொடங்கினார்.
அதேபோல் ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பிரசன்னா, தொடர்ந்து நல்ல கதையம்சமும், கதாபாத்திரமும் உள்ள திரைப்படங்களிலே நடித்து வந்தார். இந்நிலையில், அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சிநேகாவும் பிரசன்னாவும் இணைந்து நடிக்கத் தொடங்கினர்.
அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் திருமணத்தில் கைகூடியது. கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி சென்னையில் இருவருக்கும் இடையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்த ஆடி மாத விளம்பரம் பரபரப்பாக பேசப்பட்டது.
இவர்களுக்கு ஏற்கனேவே விஹான் எனும் மகன் இருக்கிறார். தற்போது சினேகா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. தற்போது இருவரும் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தை தங்களுடைய மகனுடன் செலவிட்டு ஜாலியாக அனுபவித்து வருகின்றனர்.
தற்போது சென்னையில் நல்ல வானிலை நிலவுவதால் கடலோரத்தில் அந்த இயற்கை அழகை ரசித்தபடி குடும்பத்துடன் என்ஜாய் செய்தார்கள். அதை போட்டோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.
தனது மகனுடன் பிரசன்னா-சினேகா ஜோடி தங்களுடன் செல்லமாக வளர்க்கும் இரண்டு நாய்களையும் உடன் அழைத்து வந்திருந்தார்கள் இந்த திரையுலக தம்பதியினர்.
வெகு சாதாரணமாக எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் தங்களின் மகனுடன் பொழுதை கழித்து சந்தோஷத்தில் திளைத்தனர். அந்த சந்தோஷ தருணத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











