Prasanna Sneha: கல்யாண நாளில் லைவ் ரொமான்ஸ்... இன்ஸ்டாவை சூடாக்கிய சினேகா-பிரசன்னா போட்டோஸ்

சென்னை: பிரசன்னாவும் சினேகாவும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருகின்றனர்.

அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பின்னர் 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் இருவரும் இன்று தங்களது 11வது திருமண தினத்தை ரொமான்ஸ் செய்து கொண்டாடியுள்ளனர்.

 Prasanna - Snehas 11th wedding anniversary photos are trending on Instagram

பிரசன்னா - சினேகாவின் லைவ் ரொமான்ஸ்:2002ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் பிரசன்னா. அதன்பின்னர் அழகிய தீயே, சீனா தானா 007 போன்ற படங்களில் ஹீரோவாக கலக்கிய பிரசன்னா, அஞ்சாதே படத்தில் தயா என்ற வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பிரசன்னா, அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சினேகாவுடன் இணைந்து நடித்தார்.

 Prasanna - Snehas 11th wedding anniversary photos are trending on Instagram

2009ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பிரசன்னா - சினேகா இருவரது கேரியரிலும் திருப்புமுனையாக அமைந்தது. அச்சமுண்டு அச்சமுண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இருவருக்கும் இடையே காதல் மலர காரணமானது. பிரசன்னாவுக்கு முன்னர் பல நடிகர்களுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட சினேகா, இறுதியாக பிரசன்னா தான் தனது ரோமியோ என அறிவித்தார்.

 Prasanna - Snehas 11th wedding anniversary photos are trending on Instagram

இதனையடுத்து 2009ல் பிரசன்னா - சினேகா இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இரு குழந்தைகளுக்கு பெற்றோரான பிரசான்னாவும் சினேகாவும், இன்று தங்களது 11வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிரசன்னா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

லைவ் ரொமான்ஸ் மோடில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை சூடாக்கியுள்ளது. மேலும் சினேகா குறித்து பிரசன்னா எழுதிய பதிவும் வைரலாகி வருகிறது. அதில், "ஹே பொண்டாட்டி, இது ரொம்பவே ஸ்பெஷலான நாள். உன் கரம் பிடித்த நாள் முதல் பல திருப்பங்கள், டிவிஸ்ட்கள் இருந்தன. இதில் கற்றுக்கொள்ள ஏதும் இல்லையென்றாலும் மகிழ்ச்சியுடன் இந்தப் பயணத்தை ஏற்றுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 Prasanna - Snehas 11th wedding anniversary photos are trending on Instagram

மேலும், "எனது வாழ்வில் பல சோதனைகளும் சவால்களும் இருந்தது உண்மைதான். ஆனால், நீ என் பக்கம் இருந்ததால் அதற்காக நான் எதுவும் செய்யவில்லை. உனது அன்பு என்னை இருளில் வழிநடத்தும் வெளிச்சமாக இருந்தது. அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாகவே இருக்கிறேன். மேலும், நமது குழந்தைகள் உனது விலைமதிப்பில்லாத பரிசு. உனது அன்பு, புன்னகை போன்றவற்றால் எனது உலகை வியப்புக்குரியதாக வைத்துள்ளாய்" என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

 Prasanna - Snehas 11th wedding anniversary photos are trending on Instagram

அதேபோல், "உனது கைகளைப் பிடித்துக்கொண்டு இன்னொரு ஆண்டில், இன்னொரு தொலைதூர பயணத்திற்கு தயாராகிவிட்டேன். ஹேப்பி அனிவர்ஸரி மை கண்ணம்மா, ஒவ்வொரு தொடக்கத்தையும் மிக சிறப்பாக கொண்டாடுவோம். உன்னை அளவு கடந்து காதலிக்கிறேன், நாம் நம் வாழ்க்கையை முழுமையாக வாழும்போது, நம்மைப் பற்றிய வதந்திகள் மறித்துப் போகட்டும்" என பதிவிட்டுள்ளார்.

 Prasanna - Snehas 11th wedding anniversary photos are trending on Instagram

சில தினங்களுக்கு முன்னர் பிரசன்னா - சினேகா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக வதந்திகள் வெளியானது. அதற்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் வகையில் தங்களது திருமண தினத்தை கொண்டாடியுள்ள இந்த நட்சத்திர தம்பதி. மேலும், இதுவரை எடுத்துக்கொண்ட பெஸ்ட்டான ரொமன்ஸ் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X