»   »  பிரசாந்த்-கிரகலட்சுமிக்கு கோர்ட் அட்வைஸ்

பிரசாந்த்-கிரகலட்சுமிக்கு கோர்ட் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரஹலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி தொடர்ந்த வழக்கை, சமரசமையத்தில் பேசிச் தீர்க்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிராசந்துக்கும், கிரகலட்சுமிக்கும் திருமணமான 5 வது மாதத்திலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிரகலட்சுமி தன்பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கர்ப்பிணியாக இருந்த கிரகலட்சுமிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் ஒரு ஆண்குழுந்தை பிறந்தது.

இந்நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி பிரசாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கிரகலட்சுமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கும், தனது மகனுக்கும்பிரசாந்த் மாதம் ரூ. 1 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு பிரசாந்தும், கிரகலட்சுமியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களை தனிஅறையில் அமர்ந்து மனம் விட்டு பேசுமாறு நீதிபதி கூறினார். இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம்பேசினார்கள்.

பின்னர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய நீதிபதி இருவரையும் சேர்ந்து வாழ அறிவுரை வழங்கினார்.பின்னர் இருவரையும் வரும் 8ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்திற்கு வந்து மீண்டும்பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து கிரகலட்சுமியிடம் நிருபர்கள் கருந்து கேட்டபோது அவர் பதில் கூற மறுத்து விட்டார். அவரதுவழக்கறிஞர் கூறுகையில் இருவரும் சமரச மையத்தில் வரும் 8ம் தேதி பேசுவார்கள். அப்போது நல்ல முடிவுவரும் என கூறினார்.

இதுகுறித்து பிரசாந்த கூறுகையில், மனைவியை சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்தேன். சமரச மையத்தில்பேசி தீர்க்குமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறேன் என்றார்.

இடையிடையே பிரசாந்தின் பெற்றோர், சகோதரி ஆகியோர் மீது கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை செய்ததாகபுகார்களை அடுக்கி வருவதும், கிரகலட்சுமிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக பிரசாந்த் குற்றம் சாட்டி வந்ததும்குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil