»   »  பிரசாந்த்துக்கு கோர்ட் நோட்டீஸ்

பிரசாந்த்துக்கு கோர்ட் நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கிரகலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்குமாறு நடிகர் பிரசாந்த்துக்கு சென்னை குடும்ப நலநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நடிகர் பிரசாந்த் சமீபத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் தன்னை விட்டுப் பிரிந்து சென்றமனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தார்.இதையடுத்து கிரகலட்சுமி தாக்கல் செய்த பதில் மனுவில் தனக்கு மாதந்தோறும் ரூ. 1லட்சம் ஜீவனாம்சம் தருமாறு கோரியிருந்தார்.

இதையடுத்து இருவரையும் சமரச மையத்தில் ஆலோசனை பெற்று வருமாறுநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருவரையும் அழைத்து சமரச மையம்பேச்சுவார்த்தை நடத்தியது.

இதைத் தொடர்ந்து தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், பொங்கல்பண்டிகையை பிரசாந்த்துடன் சேர்ந்து கொண்டாட விரும்புவதாகவும் கூறி கிரகலட்சுமிமனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது பிரசாந்த் ஆஜராகவில்லை. அவர்படப்பிடிப்பு தொடர்பாக டெல்லி சென்றிருப்பதாக நீதிபதி ஆறுமுகத்திடம்தெரிவிக்கப்பட்டது.

கிரகலட்சுமி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறிபிரசாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார். இன்று பிரசாந்த் நேரில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more about: notice issued to prashanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil