»   »  மீண்டும் கோர்ட்டில் பிரசாந்த் தம்பதி!

மீண்டும் கோர்ட்டில் பிரசாந்த் தம்பதி!

Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரசாந்த்தும், அவரது மனைவி கிரகலட்சுமியும் மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

தனது மனைவி கிரகலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரசாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த மனுவுக்கு பதில் அளித்து கிரகலட்சுமி தாக்கல் செய்த மனுவில், தனக்கு பிரசாந்த் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

பின்னர் இருவரையும் அழைத்து நீதிமன்றம் சமரசப் பேச்சுவார்த்தையில், ஈடுபடுத்தியது. அதன் பின்னர் தனது கணவருடன் சேர்ந்து வாழசம்மதிப்பதாக கிரகலட்சுமி கூறினார். இந்த நிலையில் பிரசாந்த் தொழில் விஷயமாக வெளிநாடு சென்று விட்டதால் அவரால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரகலட்சுமி நேரில் ஆஜரானார்.பிரசாந்த் வரவில்லை.

இதையடுத்து அவரது தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன், பிரசாந்த் ஷூட்டிங்கில் இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வரவிருப்பதாகவும், அதுவரைவிசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரினார். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார்.

பின்னர் பிரசாந்த் படப்பிடிப்பிலிருந்து நேராக நீதிமன்றண் வந்தார். பின்னர் அவர் மற்றும் கிரகலட்சுமி இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகினர்.அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil