கொரோனா பொது நிவாரணம்….. பிரஷாந்த் அவரது தந்தை தியாகராஜன் ரூ.10 லட்சம் நிதி !
சென்னை : நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் முதல்வரை சந்தித்து ரூ 10 லட்சம் கொரோனா நிதி அளித்தனர்.
Recommended Video
கொரோனா காலத்தில் முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக அவர்கள் கூறினர்.
இச்சந்திப்பு மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்றும் முதலமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் அவர்கள் கூறினர்.

தாராள நிதி உதவி
கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழக்குமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல தொழிற்துறை நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

நடிகர் நடிகைகள் நிதி
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் முதலாக வந்து ரூ 1 கோடி நிதி உதவி அளித்தனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், விக்ரம் ரூ30 லட்சம், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின் . சிவகார்த்திகேயன் தலா 25 லட்சமும், இயக்குனர் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ 10 லட்சமும் அளித்தனர்.

ரூ 10 லட்சம்
அந்த வகையில் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தை இயக்குநர் தியாகராஜனும் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த இவர்கள், இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினர். மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ 10 லட்சம் நிதி வழங்கியதாகவும் கூறினர்.

சந்தித்ததில் மகிழ்ச்சி
இந்த கொரோனா காலத்தில் முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார் என்றும், கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றனர். முதலமைச்சர் ஸ்டாலினை வெகுவாக பாராட்டினர்.


Click it and Unblock the Notifications











