twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த 138 ஓட்டு எப்படி வந்தது...விஷால் அணி ஏன் கேள்வி கேட்கல...சந்தேகத்தை கிளப்பிய பிசாந்த்

    |

    சென்னை : நடிகர் சங்க தேர்தல் 2019 ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி, பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் என இரு அணிகள் போட்டியிட்டன. பிறகு இந்த தேர்தலில் முறை கேடு நடந்துள்ளதால் தேர்தலை செல்லாது என அறிவிக்கும் படி ஐகோர்ட்டில் வழக்கு போட்டனர்.

    இரண்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் சமீபத்தில் தான், நடிகர் சங்க தேர்தலில் செல்லும். அதில் பதிவான ஓட்டுக்களை விரைவில் எண்ண வேண்டும் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஓட்டு எண்ணிக்கையையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, பிறகு அதுவும் தள்ளுபடியானது. இதனால் மார்ச் 20 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

    நயன்தாரா விருதை வாங்கிய விக்னேஷ் சிவன்.. அதுவும் இரண்டு விருதுகள்.. எந்த படத்துக்கு தெரியுமா?நயன்தாரா விருதை வாங்கிய விக்னேஷ் சிவன்.. அதுவும் இரண்டு விருதுகள்.. எந்த படத்துக்கு தெரியுமா?

    பாண்டவர் அணி வெற்றி

    பாண்டவர் அணி வெற்றி

    அறிவித்தபடியே இன்று ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நடிகர் சங்க தலைவராகி உள்ளார் நாசர். ஆனால் இந்த தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சங்கதாஸ் சுவாமிகள் அணியினர் தொடர்ந்து பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

    கூடுதலாக பதிவான ஓட்டுக்கள்

    கூடுதலாக பதிவான ஓட்டுக்கள்

    இதில் சங்கரதாஸ் அணி சார்பில், நடிகர் சங்க தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேர்தல் நடந்த 23/06/2019 அன்று 1602 ஓட்டுக்கள் பதிவானதாக சொல்லப்பட்டது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை நாளான இன்று 1609 ஓட்டுக்கள் பதிவானதாக சொல்லப்படுகிறது. 7 ஓட்டுக்கள் வித்தியாசம் வந்தது எப்படி.

    நடிகர் சங்க தேர்தலில் குளறுபடியா

    நடிகர் சங்க தேர்தலில் குளறுபடியா

    இதே போல் தபால் ஓட்டும்1042 தான் பதிவானதாக கூறினார்கள். ஆனால் தற்போது 1180 தபால் ஓட்டுக்கள் பதிவானதாக கூறுகிறார்கள். 138 ஓட்டுக்கள் வித்தியாசம் வந்துள்ளது. இந்த ஓட்டு வித்தியாசங்களே நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதை காட்டுகிறது. தேர்தலில் யார் ஓட்டத்தார்கள். யாரெல்லாம் ஓட்டளிக்கவில்லை என்றே தெரியவில்லை. இதனால் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். கோர்ட்டை அணுகி மறு உத்தரவு பெற வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.

    அந்த ஓட்டு எப்படி வந்தது

    அந்த ஓட்டு எப்படி வந்தது

    இந்நிலையில் இந்த கடிதத்தை தனது ட்விட்டரி பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் பிரசாந்த், தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் என்ன தான் நடந்தது. ஏன் எதிர் அணியை சார்ந்த யாரும், கூடுதலாக 138 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது பற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அந்த ஓட்டுக்கள் எப்படி வந்தது. ஏன் அவர்கள் மெளனம் காக்கிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஏன்ப்பா இவ்வளவு குழப்பம்

    ஏன்ப்பா இவ்வளவு குழப்பம்

    பிரசாந்த்தின் இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், நடிகர் சங்க தேர்தலில் ஏன் இவ்வளவு குளறுபடினு தெரியல. இருப்பது சில ஆயிரம் ஓட்டுக்கள் தான். கள்ள ஓட்டு போட்டதே அவங்க தான். அதனால் தான் அமைதியாக இருக்காங்க. விஷால் நடிகர் சங்கத்திற்காக ஒன்னுமே பண்ணல. அவருக்கா ஓட்டு போட்டு தேர்வு செய்திருக்கிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English summary
    In nadigar sangam election Pandavar team won and Nassar maintain his president post. Now actor Prasanth questioned that where did extra 138 votes comes from. why no one frm opposite not asking questions about the extra votes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X