நான் என்ன விஜயா? அரசியல் லாபத்திற்கு சொந்த குடும்பத்தை மறக்க? இறங்கி அடிக்கும் பிரசாந்த் ரங்கசாமி

சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவாக சில இடங்களில் குரல் கொடுத்து வந்தவர்களில் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியும் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த போது கூட, விஜய்க்கு ஆதரவாக கருத்து சொன்னவர் பிரசாந்த் ரங்கசாமி. ஆனால் விஜய் த்ரிஷாவுடன் ஒரு திருமணத்திற்குச் சென்றதும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்.

குறிப்பாக தனது சமூக வலைதளங்களில் விஜய்யின் இந்த நடவடிக்கை குறித்து காட்டமாக விமர்சித்தார். விஜய் செய்தது தவறு என்றும் தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல், விஜய்யின் இந்த செயல் குறித்த ஆதங்கத்தை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டார்.

அதில் விஜய் அண்ணா, நீங்கள் செய்தது தவறு, உங்கள் தொண்டர்களுக்கு இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள். உங்கள் தொண்டர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். விவாகரத்து வழக்கை முழுவதுமாக முடித்துவிட்டு நீங்கள் அந்த நடிகையுடன் ஒன்றாக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தால் பரவாயில்லை. நீங்கள் உங்கள் விவாகரத்துக்குப் பின்னர் உங்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக கூட த்ரிஷாவை நியமித்து கொள்ளுங்கள் யார் என்ன கேட்கப் போகிறார்கள். ஜேசன் குறித்தும் ஷாஷா குறித்தும் யோசித்து பார்த்தீர்களா?

Prasanth Rangasamy Slams Vijay For Vijay Fan Who Commented Badly About Prasanth Rangasamy Family

ஈகோ: என்ன செய்தாலும் உங்கள் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் மனைவி உங்களை குற்றம் சொல்லிவிட்டதால் உங்கள் ஈகோ ஏற்பட்டு நடிகை த்ரிஷாவுடன் நீங்கள் திருமணத்திற்கு சென்றீர்கள் என்றால், கரூரில் 41 பேர் இறந்ததற்கு உங்களை காரணம் சொன்னார்களே அப்போது எங்கே போனது உங்கள் ஈகோ? உங்களின் கட்சிக்காரர்கள் எங்கே போனார்கள்? என்று எல்லாம் காட்டமான கேள்விகளைக் கேட்டார்.

காட்டமான விமர்சனம்: இப்படி இருக்கையில் விஜய்யை விமர்சித்து கேள்விகளை அடுக்கியதால் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் இணைந்து சமூக வலைதளங்களில் பிரசாந்த் ரங்கசாமியை மிகவும் தரக்குறைவாகவும், மோசமாகவும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் விஜய்க்கு ஆதரவாக கமெண்ட் பதிவிட்ட இணைய வாசி ஒருவர், கூட ஒரு 50 ரூபாய் சேத்து குடுத்தா அவன் குடும்பத்தை அவனே திட்டுவான் போலயே என்று தரக்குறைவாக பதிவிட, அதற்கு பிரசாந்த் ரங்கசாமியோ, "நான் என்ன விஜயா ? அரசியல் லாபத்திற்கு சொந்த குடும்பத்தை மறக்க ?" என்று நெத்தியடியான பதிலை அளித்துள்ளார். அவரது இந்த பதிலடி பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், பலரும் அவரது கமெண்ட்க்கு லைக்குகளை போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X