போலீஸ் படையுடன் அந்தகன் படப்பிடிப்பில் பிரசாந்த் வெளியிட்ட புகைப்படம்

புதுச்சேரி: 90களின் இளவரசன் பிரசாந்த் இப்பொழுது அந்தாதுன் தமிழ் ரீமேக் அந்தகனில் ஹீரோவாக நடித்து வருகிறார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் மற்றும் சிம்ரன் இதில் இணைந்து நடித்து வருவதால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளனர்.

பெரும்பான்மையான காட்சிகள் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருவதால் போலீசார் படையுடன் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பிரசாந்த் இப்பொழுது பகிர்ந்துள்ளார்.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிய அந்தாதுன் திரைப்படம் தமிழில் இப்போது உருவாகி வருகிறது. இதில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க அவரது அப்பாவும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கி வருகிறார்.

நெகட்டிவ் ரோலில்

நெகட்டிவ் ரோலில்

90களில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக இருந்த பிரசாந்த் சிம்ரன் அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோயினியாக வலம் வந்த சிம்ரன் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.

பாண்டிச்சேரியில்

பாண்டிச்சேரியில்

பிரசாந்த் இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க த்ரில்லர் கதை களத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் பிரசாந்த்,சிம்ரன், பிரியா ஆனந்த், ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அப்டேட்டை வெளியிட்டுள்ளார்

அப்டேட்டை வெளியிட்டுள்ளார்

இந்த நிலையில் பிரசாந்த் மற்றுமொரு புகைப்படத்தை இப்பொழுது வெளியிட்டுள்ளார் . அதில் போலீசார் படைசூழ பிரஷாந்த் மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் இணைந்து பெரும் போலீஸ் படையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரசாந்த் இப்பொழுது தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு

அந்தகன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ரவி யாதவ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தியாகராஜனின் ஸ்டார் மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X