Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்
சென்னை : இந்தியில் காமெடி, கிரைம் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட படம் அந்ததுன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா அப்தே, தபு ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்தனர். இந்த படம் தான் தற்போது அந்தகன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இது பார்வையற்ற பியானோ இசைக் கலைஞரைப் பற்றிய கதை. பல சிக்கல்களில் இருந்து இவர் எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் படத்தின் கதை. அடுத்து அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருப்பார்கள்.
அருண்விஜய் இரட்டைவேடத்தில் கலக்கிய 'தடம்' … இந்தியில் ரீமேக்காகிறது !
தமிழில் ரீமேக் ஆன அந்ததுன்
தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் பிரசாந்த். பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்துள்ள படம் இது. இந்த படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே தயாரித்து, இயக்கி உள்ளார்.
சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா
ஸ்டார் மூவீஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த்துடன் சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, வனிதா விஜயக்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, யோகிபாபு, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி போலீசாகவும், அவரது மனைவியாக வனிதா விஜயக்குமாரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்தது
மிகுந்த பாதுகாப்புடன், விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷுட்டிங் ஜுலை 28 ம் தேதியுடன் நிறைவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் ஆகஸ்ட் மாத மத்தியில் துவங்கப்பட உள்ளது.
படம் எப்போ ரிலீஸ்
ஆகஸ்ட் மாதத்திலேயே படத்தின் அத்தனை வேலைகளையும் முடித்து, செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குள் தியேட்டர்கள் திறக்கப்பட்டு, தியேட்டரில் படம் ரிலீஸ் செய்யப்படுமா அல்லது ஓடிடி.,யில் படம் ரிலீஸ் செய்யப்படுமா என்ற தகவல் உறுதியாக வெளியாகவில்லை.
கார்த்திக் நடித்து முடித்து விட்டாரா
இதற்கிடையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் கார்த்திக்கிற்கு காலில் காயம் ஏற்பட்டதால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டாரா, அப்படி முடிக்கவில்லை என்றால் படத்தை எப்படி தொடர்வார்கள், திட்டமிட்டபடி செப்டம்பரில் படம் ரிலீஸ் செய்யப்படுமா என பல கேள்விகள் எழுந்துள்ளன.