குயின் பட ரீமேக்கில் பிரசாந்த் - கங்கனா!

By Shankar

குயின் படத்தின் ரீமேக்கில் பிரசாந்தும் இந்தி நடிகை கங்கனா ரணவத்தும் நடிக்கிறார்கள்.

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் குயின். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ 100 கோடி வசூலித்து கலக்கியது.

கதை

கதை

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் மணப்பெண்ணை தனிமையில் அழைக்கும் வருங்கால கணவன், தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் அதிரடியாக எடுக்கும் முடிவுதான் குயின் கதை.

ரீமேக்

ரீமேக்

இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் தயாராகிறது. இந்த ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தையும், பிரபல நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் பெற்றுள்ளார்.

பிரசாந்த்

பிரசாந்த்

இந்த படத்தில் பிரசாந்த் நடிப்பாரா மாட்டாரா? என்ற கேள்வி இருந்தது. இப்போது பிரசாந்த் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஹீரோயினாக நடிக்க பல பிரபல நடிகைகளும் போட்டி போட்டனர்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா, நயன் தாரா, சமந்தா ஆகிய மூன்று நடிகைகளும் தங்களுக்கே அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என தியாகராஜனையும், பிரசாந்தையும் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. நயன்தாரா கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டார் என்றும் சொன்னார்கள்.

கங்கனாவே...

கங்கனாவே...

ஆனால் இறுதியில் இந்த படத்தில் பாலிவுட்டில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத்தே நடிக்க உள்ளார். இதனை நடிகையின் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. தியாகராஜனிடம் கேட்டபோது உண்மைதான் என்றவர், விரைவில் தாமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X