»   »  கிரகலட்சுமி-பிரஷாந்த் ஆஜராக உத்தரவு

கிரகலட்சுமி-பிரஷாந்த் ஆஜராக உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி நடிகர் பிரசாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனு பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் பிரசாந்த்தும், அவரது மனைவிகிரகலட்சுமியும் தவறாமல் நே>ல் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரசாந்த்தும், அவரது மனைவி கிரகலட்சுமியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி பிரசாந்த், குடும்ப நல நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தி வைக்க முயற்சிகள் மேற்கொண்டது.இதைத் தொடர்ந்து இருவரிடமும் சமரச மையத்தில் தனித் தனியாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரசாந்த்துடன் இணைந்து வாழ கிரகலட்சுமி விருப்பம் தெரிவித்தார்.

மேலும் பிரசாந்த்துடன் தன்னை இணைத்து வைக்கக் கோரி மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனுக்களைவிசாரித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய பிரசாந்த்துக்கு உத்தரவிட்டார். நேற்று இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரசாந்த் ஆஜராகவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளதால் வழக்கை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன் வாதாடினார்.

ஆனால் வழக்கை விரைவாக நடத்த வேண்டும் என கிரகலட்சுமியின் வழக்கறிஞர் அபுடுகுமார் வாதாடினார். இருதரப்பு வாதங்கைளயும் கேட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், பொங்கல் அன்று தன்னை கணவர்வீட்டுக்ககுச் செல்ல அனுமதிக்கக் கோரி கிரகலட்சுமி தாக்கல் செய்த மனு காலாவதியாகி விட்டதால் அதுதள்ளுபடி செய்யப்படுகிறது.

பிப்ரவரி 12ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும். வழக்கு அன்றைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil