அந்தகன் படம் எப்படி இருக்கு? கம்பேக் கொடுத்தாரா பிரசாந்த்.. பொதுமக்கள் விமர்சனம்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் என பலர் நடித்துள்ளனர். இன்று படம் வெளியாகி இருக்கும் நிலையில் மக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அந்தகன் திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் என்பவர் தான் இந்தியில் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டதோடு, இப்படத்திற்கு சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த நடிகர் ஆகிய மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

Prashanth Andhagan Public Review

பிரசாந்தின் அந்தகன்: இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார். இப்படத்தை முதலில், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிட்க் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து, தியாகராஜனே இப்படத்தை இயக்கி உள்ளார். பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வர்சி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இன்று இப்படம் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தை பார்த்த மக்களின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

த்ரில்லிங்கா இருக்கு: படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் செம த்ரில்லிங்கா இருக்கு, படத்தை நல்லா சஸ்பென்சா கொடுத்து இருக்கிறார். படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது கதாபாத்திற்கு ஏற்ற மாதிரி நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு இரண்டாவது ஹீரோ சந்தோஷ் நாராயணன் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு இசை பக்காவா வந்து இருக்கு என்றனர்.

இதுதான் கம்பேக்: முதல் பாதி ரொம்ப நல்லா இருக்கு, இந்த படத்தில் பிரசாந்த் பார்வை அற்றவராக நடித்து இருப்பதால், அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ இதை மட்டும் மனதில் வைத்து நடித்து இருக்கிறார். இதனால், அவரின் டான்ஸ் மற்றும் சண்டை காட்சிகளை பார்க்க முடியாமல் போய்விட்டது. இதுதான் ஒரே வருத்தம், மற்றபடி படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், நிச்சயம் இந்த படம் பிரசாந்திற்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும், சஸ்பென்ஸ், சென்டிமென்ட், த்ரில்லிங்கு படம் போர் அடிக்காமல் இருக்கு என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X