செம்ம ஷாட்...யோகி பாபுவுடன் கிரிக்கெட் விளையாடிய பிரசாந்த்

சென்னை : நடிகர் பிரசாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தனது தந்தை தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். இது இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் படமாக ஓடிய அந்ததுன் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் குறித்த சில சுவாரஸ்யமான ஃபோட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

கிரிக்கெட் விளையாடிய பிரசாந்த்

கிரிக்கெட் விளையாடிய பிரசாந்த்

குறிப்பாக படப்பிடிப்பின் போது, இடைவேளை சமயத்தில் படக்குழுவில் உள்ளவர்களுடன் பிரசாந்த் மற்றும் யோகிபாபு கிரிக்கெட் விளையாடிய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

பந்துகளை விளாசிய யோகிபாபு

பந்துகளை விளாசிய யோகிபாபு

பிரசாந்த், யோகிபாபு இருவருமே பந்துகளை சிக்சர், பவுண்டரி என அடித்து விளாசிய காட்சிகளும் அதிகம் பகிரப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மிக கச்சிதமாக பிரசாந்த் ஆஃப் ஸ்ப்பின்னரை போல் பந்து வீசுவது லைக்குகளை அள்ளி வருகிறது.

விளையாட்டில் கே.எஸ்.ரவிக்குமார்

பிரசாந்த், யோகி பாபு மட்டுமல்ல இவர்களுடன் இணைந்து, ஹிட் பட டைரக்டரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமாரும் கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் நடந்து வரும் சமயத்தில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.

வேகமாக படப்பிடிப்பை நடத்த திட்டம்

வேகமாக படப்பிடிப்பை நடத்த திட்டம்

பல மாற்றங்கள் செய்து அந்தகன் படத்தை தானே இயக்கி, தயாரித்து வருகிறார் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக எந்த நேரத்திலும் படப்பிடிப்புக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிக்கப்படலாம் என்பதால், படத்தின் வேலைகளை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா

இந்த படத்தில் பிரசாந்த்திற்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் போலீசாக நடிக்கும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா விஜயக்குமார் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X