தட்டித்தூக்கிய பிரசாந்த்… இதுதான்யா கம்பேக்.. பயில்வான் ரங்கநாதனின் அந்தகன் விமர்சனம்!
சென்னை: டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் நடிகரும், இயக்குனரான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இந்தியில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
அந்தகன் படத்தின் கதை: படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கு, படம் எந்த இடத்திலும் போர் அடிக்காமல் மிகவும் சுவாரசியமாக செல்கிறது. கண் தெரியாமல் இருக்கும் பிரசாந்திற்கு நன்றாக பியானோ வாசிக்கத் தெரியும். அவரை சிலர் கடத்தி வைத்து துன்புறுத்துகிறார்கள், இந்த துரோகிகளின் சதியில் இருந்து பிரசாந்த் எப்படி விடுபடுகிறார் என்பது தான் அந்தகன் படத்தின் கதை. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குறையாமல் நன்றாக இயக்கி இருக்கிறார் தியாகராஜன்.

இதுதான் கம்பேக்: நீண்ட நாட்களுக்கு மிகு பிரசாந்தை திரையில் பார்ப்பது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. கம்பேக் கம்பேக்னு சொல்லுவார்கள், ஆனால் கம்பேக் திரைப்படமாக இருக்காது. ராமராஜனின் சாமானியன், மோகனின் ஹரா போன்ற படங்கள் இப்படி சொல்லியே வீணாப்போனது. ஆனால், பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் உண்மையில் அவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. கண்னை மூடிக்கொண்டு பார்வை இல்லாதவராக நடித்து விடலாம், இந்த படத்தில் கண்களை திறந்து கொண்டே பார்வையற்றவராக நடித்து இருக்கிறார் பிரசாந்த், இது பாராட்ட வேண்டிய ஒன்று.
மோசமான ரோல்: சமுத்திரக்கனியை இதுவரைக்கும் நாம் வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என பல கேரக்டரில் பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த படத்தில் மோசமான ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி சிம்ரனை சின்னவீடாக வைத்து இருக்கிறார். இந்த விஷயம் யாருக்கு தெரியும் என்பதுதான் படத்தின் கதை ஓட்டம் செல்கிறது. இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என்று சிம்ரனை மிரட்டி பணம் சம்பாதிக்கிறார் யோகி பாபு. அதே போல வனிதாவிற்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றால் போல வனிதாவும் நடித்து அசத்தி உள்ளார்.
சூப்பர் பாடல்: சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. விஜய்சேதுபதி, அனிருத் பாடிய பாடல் சிறப்பாக வந்துள்ளது. பிரசாந்தின் டான்ஸ் இல்லை என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு படத்தின் கடைசியில் ஒரு பாட்டை போட்டு குஷிப்படுத்தி விட்டார் இயக்குநர். நீண்ட நாட்களுக்கு பின் திரையில் வந்து ஒரு அட்டகாசமான கம்பேக்கை கொடுத்து இருக்கிறார் நடிகர் பிரசாந்த் என்று பயில்வான் அந்தகன் படத்தை பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











