ஒரு வார்த்தை சொன்னேன்.. வனிதா பேசுன கெட்ட வார்த்தை இருக்கே யப்பா.. சீக்ரெட் சொன்ன பிரசாந்த் தந்தை
சென்னை: டாப் ஸ்டார் பிரசாந்த் இப்போது அந்தகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பல வருடங்கள் கழித்து அவர் ஹீரோவாக களமிறங்கியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். படத்தை அவரது தந்தை தியாகராஜனே இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் படத்தில் நடித்த வனிதா விஜயகுமார் குறித்து தியாகராஜன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டில் பிரசாந்த் தவிர்க்க முடியாத நடிகர். அவரது தந்தை தியாகராஜன் சினிமாவில் இருந்தாலும்; முறையாக பல கலைகளை பயின்றுவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தார் பிரசாந்த். அவர் நடித்த முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதை அடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீதுதான் திரும்பியது. அந்த சின்ன வயதில் அவ்வளவு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த திறமையாளன் என்பதை சட்டென உணர்த்தியவர் பிரசாந்த்.

டாப் ஹீரோ: முதல் பட வெற்றிக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துக்கொண்டே வந்தார். 90களில் விஜய், அஜித்தைவிடவும் டாப்பில் இருந்தவர் பிரசாந்த்தான். ஆக்ஷன், ரொமான்ட்டிக், காமெடி என அனைத்து ஜானர் படங்களையும் கொடுத்து; அப்போது வளர்ந்துவந்த ஹீரோக்களுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என்றுதான் சினிமாவை நன்கு அறிந்தவர்கள் சொல்வார்கள்.
சில பிரச்னைகள்: பிரசாந்த்தின் கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டதாகவும்; அதன் காரணமாக சினிமாவிலிருந்து அவர் ஒதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் பலர் சொல்வதுண்டு. முக்கியமாக அவரது திருமண விவகாரம்தான் பிரசாந்த்தை கொஞ்சம் அசைத்து பார்த்துவிட்டது என்றும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரசாந்த் மனம் தளராமல் தனது காலத்துக்காக காத்திருந்தார்.
அந்தகன் பிரசாந்த்: இடையே தெலுங்கு சினிமாவில் சப்போர்ட் ரோல் செய்தார். சூழல் இப்படி இருக்க அந்தாதூன் படத்தை ரீமேக் செய்து ஹீரோவாக களமிறங்க முடிவு செய்தார்.படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருக்கிறார். அந்தாதூன் படம் ஹிந்தி மட்டுமின்றி பலமொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனவே அதனை ரீமேக் செய்து வருவதன் மூலம் பிரசாந்த் விட்ட இடத்தை பிடிப்பார் என்று ஒருதரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
தியாகராஜன் பேச்சு: இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது வனிதா குறித்து பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மேடையில் பேசிய தியாகராஜன், "இந்தப் படத்தின் ஒரு காட்சிக்கு எமோஷன் வேண்டும் என்பதற்காக வனிதாவை அழைத்து உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தையெல்லாம் பேசு என்றுதான் சொன்னேன். அவரோ, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பச்சை பச்சையாக பேசிவிட்டார். அதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள், சார் இப்படி பேசுறாங்க.. சென்சார்ல என்ன பண்ணப்போறீங்க என்று கேட்டார்கள்.அதை அப்போ பார்த்துக்கலாம்.இப்போதைக்கு இந்த சீனுக்கு எமோஷன் தேவை என்று சொல்லிவைத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











