சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா?

By Siva

Recommended Video

Actor Prashanth : 2k kids-க்கு தெரியாத Swim Suit நடிகர்- வீடியோ

சென்னை: அந்தாதுன் பட ரீமேக்கில் நடிப்பதற்காக பிரசாந்த் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார்.

ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்த்தின் திரையுலக பயணம் எப்படி, எப்படியோ போய்விட்டது. அஜித், விஜய், பிரசாந்த் என்று இருந்து வந்தது. ஒரு நேரத்தில் பிரசாந்த் காணாமலேயே போய்விட்டார்.

Prashanth loses 20 kilos for Andhadhun remake

அவர் திரும்பி வந்த பிறகு அவரின் கெரியர் சூடுபிடிக்கவில்லை. இந்நிலையில் ராம் சரண் தேஜா நடித்த வினய விதேய ராமா தெலுங்கு படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக பிரசாந்த்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அய்யோ பாவம், பிரசாந்த்துக்கா இந்த நிலைமை என்று பரிதாபப்படாதவர்களே இல்லை.

இந்நிலையில் 3 தேசிய விருதுகளை வென்ற அந்தாதுன் இந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கி அதில் தன் மகன் பிரசாந்த்தை நடிக்க வைக்கிறார். அந்தாதுன் ரீமேக்கில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு பிரசாந்த்துக்கு கிடைத்துள்ளது.

Prashanth loses 20 kilos for Andhadhun remake

ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரசாந்த் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளாராம். மேலும் பிரசாந்த்துக்கு நன்றாக பியானோ வாசிக்கத் தெரியும் என்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது.

அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மான் குரானா பார்வையற்ற பியானோ கலைஞராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பெரிய இயக்குநரை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் தியாகராஜன். அந்தாதுன் படத்தை சிறப்பாக ரீமேக் செய்துவிட்டால் அது நிச்சயம் பெரிய ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த ரீமேக் பிரசாந்த்துக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. முன்னதாக பிரசாந்த்தை வைத்து ஜானி கத்தார் படத்தை ஜானி என்கிற பெயரில் ரீமேக் செய்தார் தியாகராஜன். அந்த படம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்நிலையில் தான் தியாகராஜன் அந்தாதுன் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X