Prashanth Neel Net Worth: மூன்றே படங்கள்... 2000 கோடி... பிரசாந்த் நீல் நெட் ஒர்த் தெரியுமா?
பெங்களூரு: கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல்.
தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், இன்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு இயக்குநர் பிரசாந்த் நீல்க்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரசாந்த் நீலின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்த விபரங்களை இங்கே பார்க்கலாம்.

பிரசாந்த் நீல் நெட் ஓர்த்: கன்னட திரையுலகில் இருந்து இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் நீல். 2014ம் ஆம் ஆண்டு வெளியான 'உக்ரம்' தான் பிரசாந்த் நீல் இயக்கிய முதல் படமாகும். ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா உள்ளிட்ட இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால், அதன்பின்னர் அவரது இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் படம், இந்திய திரையுலகிற்கே சவால் விட்டது.
ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 300 கோடி வரை வசூலித்தது. கேங்ஸ்டர் ஜானர் படமாக உருவான இதில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் அடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்தாண்டு வெளியானது. பிரசாந்த் நீல், யாஷ், க்ருத்தி ஷெட்டி என அதே கூட்டணியில் உருவாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎஃப் 2 பாக்ஸ் ஆபிஸில் 1300 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. மூன்றே படங்களில் 2000 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொடுத்த பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார். வரும் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ள இந்தப் படமும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் NTR 31 படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இன்று 43வது பிறந்தநாள் கொண்டாடும் பிரசாந்த் நீல்க்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பிரசாந்த் நீலின் சம்பளம், சொத்து மதிப்பு, கார்கள் குறித்த விபரங்கள் வைரலாகி வருகின்றன. உக்ரம், கேஜிஎஃப் முதல் பாகம் என இரண்டு படங்களுக்குமே ரொம்பவே குறைவாக தான் சம்பளம் வாங்கியுள்ளார் பிரசாந்த் நீல். ஆனால், கேஜிஎஃப் முதல் பாகம் வெற்றிப் பெற்றதால், இரண்டாம் பாகத்திற்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
அதேபோல், படத்தின் லாபத்தில் இருந்தும் பிரசாந்த் நீல்க்கு ஒரு ஷேர் சென்றுள்ளது. மேலும், தற்போது இயக்கி வரும் பிரபாஸின் சலார் படத்திற்காக 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் பிரசாந்த் நீலின் நெட் ஒர்த் 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என கன்னட சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து ஜூனியர் என்.டி.ஆரின் படம், கேஜிஎஃப் 3ம் பாகம் ஆகியவற்றையும் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார்.
அதேபோல், தேவையில்லாத விளம்பரம், வெட்டி பந்தா போன்றவைகளை விரும்பாத பிரசாந்த் ஒரெயொரு BMW கார் மட்டுமே வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களூ அருகே சொந்தமாக ஒரு வீடு இருப்பதாகவும், மற்றபடி அவருக்கு பெரிதாக சொத்துகள் இல்லையென்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் காஸ்ட்யூமிலும் ரொம்பவே சிம்பிளாக தான் இருப்பாராம் பிரசாந்த் நீல்.


Click it and Unblock the Notifications











