Don't Miss!
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விக்ரம் படத்தை பார்த்த கேஜிஎஃப் இயக்குநர்.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? வேறலெவல் அங்கீகாரம்!
சென்னை: இந்த ஆண்டு வெளியான ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையே பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது கேஜிஎஃப் 2.
அந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி போட்டுள்ள ட்வீட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் அவர் போட்ட ட்வீட் டிரெண்டாகி வருகிறது.
வயசானாலும் எனர்ஜி குறையாத கமல்.. விக்ரம் படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ வெளியீடு!

பாராட்டுக்களை அள்ளிய தமிழ்ப் படம்
இந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த பெருமையையும் தூக்கி நிறுத்தியுள்ளது. சமீப காலத்தில் இப்படியொரு பாராட்டுக்களை பெற்ற படமாக எந்தவொரு முன்னணி நடிகரின் படமும் இருந்ததில்லை. அதே போல வசூல் ரீதியாகவும் விக்ரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இயக்குநர் ஷங்கர், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் விக்ரம் படத்தை பாராட்டி உள்ளனர்.

பிரசாந்த் நீல் பாராட்டு
இந்நிலையில், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் மூன்று பேரும் சேர்ந்து சரியான விருந்து கொடுத்துள்ளனர். அன்பறிவ் மாஸ்டர்கள் ஆக்ஷன் காட்சிகளில் அனல் கிளப்பி உள்ளனர். லோகேஷ் கனகராஜ் உங்களின் உழைப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என கேஜிஎஃப் படத்தை கொடுத்த இயக்குநர் பாராட்டி இருப்பது ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

அன்பறிவ் மாஸ்டர்ஸ்
கேஜிஎஃப், விக்ரம் படங்களின் சண்டை இயக்குநர்கள் அன்பு மற்றும் அறிவு மாஸ்டர்களின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், விக்ரம் படத்தின் ஆக்ஷன் காட்சி மேக்கிங் வீடியோவை ஷேர் செய்து இப்படியொரு பாராட்டு ட்வீட்டை இயக்குநர் பிரசாந்த் நீல் பதிவிட்டுள்ளார். பிரபாஸ் நடிப்பில் சலார், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் என வெறித்தனமாக அடுத்தடுத்த பான் இந்தியா படங்களை உருவாக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

பாலிவுட்டில் சொதப்பல்
ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்கள் இந்த ஆண்டு தென்னிந்தியாவில் வெளியாகி பான் இந்தியா ஹிட் அடித்தது. விக்ரம் படத்தின் இந்தி பாக்ஸ் ஆபிஸ் அந்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. கமல்ஹாசனின் விக்ரம் படம் இந்தி பெல்ட்டில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களை போல வசூல் வேட்டை நடத்தி இருந்தால் 1000 கோடி வசூலை இந்த படமும் அசால்ட்டாக கடந்திருக்கும்.

ஓடிடி ரிலீசுக்கு வரவேற்பு
அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் படம் வெளியான போது விக்ரம் படம் வெளியான நிலையில், பாலிவுட் விநியோகஸ்தர்கள் அங்கே படத்தை சரியாக கொண்டு செல்லவில்லை என்பது குறையாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான விக்ரம் படத்துக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.