அன்பறிவ் ஆக்ஷனில்.. 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தின் தெறிக்கும் கிளைமாக்ஸ்.. இயக்குனர் தகவல்
சென்னை: கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தின் கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் ஷூட்டிங், சண்டை இயக்குனர்கள் அன்பறிவின் அதிரடியில் தொடங்கி இருக்கிறது.
'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
இந்தப் படம் வரவேற்பு பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது.
இந்தியாவின் முதல் செங்குத்து காடு 14 மாடி குடியிருப்பு

நடிகர் சஞ்சய் தத்
முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர்
நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார்

பங்கேற்பாரா?
முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், அதில் இருந்து அவர் முழுவதும் குணமடைந்துவிட்டார். இதன் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார்.

கிளைமாக்ஸ் ஆக்ஷன்
கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படத்தை முடிக்கவில்லை. 'பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதில் முக்கியமானது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. கொரோனாவுக்கு பிறகு கடந்த மாதம் மங்களூரில் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

அன்பறிவ் ஸ்டன்ட்
இந்நிலையில், இதன் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் ஹீரோ யஷ், அதீரா சஞ்சய் தத் மோதும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, இதை இயக்குனர் பிரசாந்த் நீல்
தெரிவித்துள்ளார்.

புதிய தோற்றம்
தமிழின் முக்கியமான சண்டை இயக்குனரான அன்பறிவ், இந்த ஆக்ஷன் காட்சியை மிரட்டலாக அமைக்கின்றனர். இதற்கிடையே படத்தின் ஹீரோ யஷ், இந்தப் படத்தில் தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











