அந்த 2 டைரக்டரை டார்கெட் செய்யும் பிரசாந்த்.. கோட் படத்தை விட பெரிய சம்பவத்தை கொடுக்க பக்கா பிளான்!

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படம், தனுஷின் 50வது படங்கள் வரிசையாக வெற்றிப் பெற்று வரும் நிலையில், பிரசாந்தின் அந்தகன் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரசாந்த் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், கம்பேக் கொடுத்துள்ளதாக பலரும் அவரை வரவேற்று வருகின்றனர்.

அந்தகன் படத்தின் வெற்றி பிரசாந்துக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் நடித்துள்ள கோட் திரைப்படமும் அடுத்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டால், அடுத்து பிரசாந்த் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் கேள்வியாக இருக்கும்.

Prashanth Nelson Lokesh Kanagaraj

இந்நிலையில், தொடர்ந்து 2 பெரிய இயக்குநர்களின் பெயர்களை அடிக்கடி பிரசாந்த் சொல்லி வருவதால் அவர்களில் ஒருவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார் என தெரிகிறது.

அதிகரித்த புக்கிங்: அந்தகன் படத்துக்கு முதல் நாளில் 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சனிக்கிழமையான இன்று டிக்கெட் புக்கிங் அனைத்து இடங்களிலும் அதிகரித்துள்ளது. நேற்று வெளியான 8 படங்களில் அந்தகன் படத்திற்கு வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ஆள் பக்காவா இருக்காரு: 51 வயதாகும் நடிகர் பிரசாந்த் இந்த வயதிலும் கட்டுமஸ்த்தான உடம்புடன் ஆள் பார்க்கவே செம பக்காவாக இருக்கிறார். மேலும், அந்தகன் ஆந்தம் பாடலில் அவர் நடனமாடியதை பார்த்து பலரும் மிரண்டு போய் விட்டனர். விஜய்யுடன் கோட் படத்திலும் விசில் போடு பாடலில் பிரசாந்த் சிறப்பாக நடனமாடிய நிலையில், பழையபடி தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார் என பிரசாந்த் ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.

கோட் படத்தில் விஜய்க்கு இணையாக: கோட் படத்தில் விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மோகன் மெயின் வில்லனா? அல்லது பிரசாந்த் மெயின் வில்லனா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. விஜய் தான் மெயின் வில்லன் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் விஜய்க்கு அடுத்தபடி பிரசாந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என தெரிகிறது.

பிரசாந்த் பயோபிக்: பிரசாந்தின் பயோபிக் உருவானால் பிரசாந்தாக அவரே நடிப்பேன் எனக் கூறியுள்ளார். மேலும், அந்த படத்தை நெல்சன் அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தான் தற்போது கோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாக உள்ள நிலையில், இருவரில் ஒருவர் படத்தில் நடிக்க முடிவு செய்து வருகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜெயிலர் 2வுக்கு முன்பாக: நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 உருவாவதற்கு முன்பாக பிரசாந்தை வைத்து டார்க் காமெடி படத்தை நெல்சன் இயக்கினால் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கருதி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்திலும் பிரசாந்த் கேமியோ பண்ணலாம் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். விரைவில் தனது அடுத்த படத்தை வெயிட்டாக அறிவிக்க காத்திருக்கிறார் பிரசாந்த் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X