விஜய் வெற்றி.. வளைச்சு வளைச்சு வம்புக்கு போகும் பிரசாந்த் ரங்கசாமி.. ஆடினே இருப்பாரு போல!

சென்னை: பிரபல சினிமா விமர்சகரும் தவெக ஆதரவாளருமான பிரசாந்த் ரங்கசாமி தவெக வென்ற பின்னர், உற்சாகத்தில் இருக்கிறார். தவெக 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் மொட்டை அடித்துக் கொள்வதாக அறிவித்தார், அதேபோல் மொட்டை அடித்துக் கொண்டார். இப்படி இருக்கையில் தவெக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பிரசாந்த் ரங்கசாமி விஜய்க்கு எதிராக பதிவிடுபவர்கள் பதிவுக்கும் திமுகவுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களுக்கும் உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார்.

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் தவெக கேட்டுக் கொண்டதை அடுத்து, அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவம் கார்த்திக், தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யை டேக் செய்து, " மோதிலால் நேரு
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
சஞ்சய் காந்தி
ராஜீவ் காந்தி
சோனியா காந்தி
பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி

இதுவெல்லாம் வாரிசு அரசியலிலும், குடும்ப ஆதிக்கத்திலும் வராதா? வாரிசு அரசியல் செய்வதில் திமுகவுக்கு முன்னோடி காங்கிரசு. திமுக செய்வது மூன்று தலைமுறை வாரிசு அரசியல்; ஒரு குடும்ப ஆதிக்கம்! காங்கிரசு செய்வது ஐந்து தலைமுறை வாரிசு அரசியல்; ஒரு குடும்ப ஆதிக்கம். What Bro? என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பிரசாந்த் ரங்கசாமி, " சொந்த கட்சி தலைவன டெபாசிட்டாவது வாங்க வச்சிட்டு இதெல்லாம் பேசினா , எதோ மக்கள் ஏத்துப்பாங்க . சிரிக்கிறாங்க ப்ரோ" என்று பதிவிட்டுள்ளார்.

Prashanth Rangasamy Targets Critics After Vijay s TVK Win Social Media Clashes Intensify

பிரசாந்த் ரங்கசாமி: அதேபோல் திமுகவைச் சேர்ந்த டான் அசோக் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவுக்கு பிரசாந்த் ரங்கசாமி பதில் அளித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அதனால் தான் அவர்கள் தவெகவைச் தேர்வு செய்துள்ளார்கள். எல்லார் வீடுகளிலும் ஏ.சி. மிக்ஸி, சொகுசு கார் என எல்லாம் உள்ளது. தமிழ்நாடு தற்போது சிங்கப்பூராக மாறிவிட்டதா?

பாதுகாப்பு: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ரூபாய் 50 சேர்த்துக் கொடுத்தால் 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கும் மதுபானக் கடைகளை திறந்து வைத்துக் கொண்டு இளைஞர்களின் வாழ்க்கையை நாசம் செய்து கொண்டு இருக்கிறது. பெண்கள் வெளியே சென்றால் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற அச்சத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறோம். திமுகவே திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுவிட்சர்லாந்து போல மாறிவிடுமா?" என்று கேள்வி கேட்டுள்ளார். இவரது இது போன்ற பதிவுகளை பார்த்த பலரும், தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைய உள்ள நிலையில், எல்லோரிடமும் வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறாரே பிரசாந்த் ரங்கசாமி என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X