வெற்றி வாகை சூடும் விஜய்.. மொட்டை போட ரெடியான பிரசாந்த் ரங்கசாமி.. ரங்கராஜ் பாண்டே நிலைமை?

சென்னை: விஜய் அரசியலில் 10 சதவீத ஓட்டுக்களை பெற்றுவிட்டால் இனிமேல் அரசியலே பேசமாட்டேன் என சொன்ன ரங்கராஜ் பாண்டேவை யாராச்சும் பார்த்தீங்களா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பாண்டா மொட்டை போடப் போறான் என கலாய்த்து வருகின்றனர்.

விஜய் பெரும்பான்மையை நிரூபித்தால் தான் மொட்டை போடுவதாக விமர்சகரும் நடிகருமான இட்டிஸ் பிரசாந்த் எனப்படும் பிரசாந்த் ரங்கசாமி சொன்னதை போலவே சந்தோஷமா மொட்டை போட ரெடி என தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

Prashanth Rangaswamy accepted he will do tonsure his head after Vijay s TVK lead

ஆரம்பத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்த பிரசாந்த் ரங்கசாமி கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்துக்குப் பிறகு விஜய்யை எதிர்த்து பேசத் தொடங்கினார். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு எக்ஸிட் போல் முடிவுகளின் போதே விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.

விஜய்க்கு எதிராக மீடியா ஆட்கள்: திமுக, நாதக, அதிமுகவை தாண்டி விஜய்க்கு எதிராக பல முன்னணி மீடியாக்களில் பணியாற்றும் பிரபல பத்திரிகையாளர்களே விஜய் எல்லாம் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார் என ஏக வசனம் பேசி ஏளனமாக பார்த்தனர். ஆனால், தற்போது விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்து மற்ற கட்சியினரையும் மீடியா ஆட்களையும் கதற விட்டு வருகிறார்.

Prashanth Rangaswamy accepted he will do tonsure his head after Vijay s TVK lead

மொட்டை போட ரெடி: ரங்கராஜ் பாண்டே இனிமேல் அரசியலே பேசமாட்டாருல்ல என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், பிரசாந்த் ரங்கசாமி மொட்டை போடுவாரா என கேள்விகள் கிளம்பின. இந்நிலையில், "சத்தியமா சொன்னது சொன்னது தான்.. ஹேப்பியா பண்ணலாம்" என விஜய்க்கு எதிராக பேசிய பிரசாந்த் ரங்கசாமி மொட்டை போட்டுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

வீடுகளில் விசில் ஊதும் சிறுவர்கள்: இதுவரை சுட்டி டிவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் எல்லாம் இந்த முறை செய்தி சேனல்களை பெரியவர்களை விட ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மேலும், பல வீடுகளில் குழந்தைகள் விசில் அடித்துக் கொண்டாடி வருகின்றனர். தவெகவினர் இப்போதே பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சிஎம் விஜய் தான் என கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X