மொட்டை.. விஜய் அண்ணாவை விட கட்ஸ் ஜாஸ்த்தி எனக்கு.. பிரசாந்த் ரங்கசாமி திடீர் சவால்.. ஏன்?

சென்னை: தேர்தல் தேதி அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் சினிமா மோகம் அடங்கி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சினிமா யூடியூப் விமர்சகர்களான பிரசாந்த் ரங்கசாமி, ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் சினிமாவை தாண்டி அதிகளவில் அரசியல் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் இந்த முறை தவெக தலைவராக மாறி தேர்தலில் களம் காணவுள்ள நிலையில், அவர் தொடர்பாக ஏகப்பட்ட பிரபலங்கள் அரசியல் கருத்துக்களை அடுக்கி வருகின்றனர்.

Prashanth Rangaswamy challenges Vijay with tonsure head challenge
Photo Credit:

விஜய் NDA கூட்டணியுடன் இணைவார் என ஒரு பக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் தனியா நின்னு போட்டியிட்டால் 30 சீட் கூட வரமாட்டார் என்றும் அதற்கு மேல் வந்தால் தான் மொட்டையடித்துக் கொள்வதாக விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி ட்வீட் போட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

விஜய் அண்ணாவை விட கட்ஸ் அதிகம்: எந்தவொரு கூட்டணியிலும் சேராமல் விஜய் 30 சீட்களுக்கு மேல் ஜெயித்துவிட்டால் என்னோட தலையில் மொட்டை அடிச்சிக்குறேன். விஜய் அண்ணாவோட எனக்கு கட்ஸ் அதிகம் என விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

விஜய்க்கு எதிராக: தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்த பிரசாந்த் ரங்கசாமி விஜய் - சங்கீதா விவாகரத்து மற்றும் விஜய் - த்ரிஷா இருவரும் ஒன்றாக ஏஜிஎஸ் இல்ல திருமண விழாவுக்கு வந்ததை எல்லாம் பார்த்து கடுப்பாகி விட்டார். இனிமேல் தவெகவுக்கு எதிராகவே கருத்துக்களை பதிவிடுவேன் என சோஷியல் மீடியாவில் விஜய்க்கு எதிரான யுத்தத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தான், விஜய் கட்சி கண்டிப்பாக 30 இடங்களில் கூட வெல்ல வாய்ப்பே இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அப்படி ஒருவேளை 30 தொகுதிகளுக்கு மேல் விஜய் கட்சி வென்றுவிட்டால் திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செய்கிறேன் என்றும் அவர் சவால் விட்டுள்ளார்.

டெலிட் பண்ணிட்டு ஓடிடாதே: இவரது ட்வீட்டை பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இந்த ட்வீட்டை டெலிட் பண்ணிட்டு ஓடிவிடாதே என வம்பிழுத்து வருகின்றனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய ட்விஸ்ட் மற்றும் டர்ன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X