வேஸ்ட் லைஃப்.. லோகேஷ் கனகராஜ் போட்ட உழைப்பை மணிரத்னம் போடல.. பிரசாந்த் ரங்கசாமி தக் லைஃப் விமர்சனம்!
சென்னை: தக் லைஃப் படம் பார்கச் சென்றால் நாம் தான் தக்காக இருக்க வேண்டும், இந்த படத்தில் இருந்து வெளியே வந்தால், நம் உடம்பில் தான் ஏகப்பட்ட காயங்கள் ஏற்படும் போல இருக்கு. உள் காயம், வெளிக்காயம், பெருங்காயம் என விமர்சனத்தின் ஆரம்பத்தில் இருந்தே தக் லைஃப் படத்தை ஒரு வேஸ்ட் லைஃப் படம் என கழுவி ஊற்றியிருக்கிறார் பிரசாந்த் ரங்கசாமி.
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுத்து முன்னதாக ட்வீட் போட்ட பிரசாந்த் ரங்கசாமி, தக் லைஃப் படத்தை சப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் 5 முறை படத்தை தான் பார்க்கப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால், தனது விமர்சனத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, தக் லைஃப் படத்தின் மைனஸ்களை மொத்தமாக அடுக்கி சோலியை முடித்து விட்டார்.

பிரசாந்த் ரங்கசாமியே இப்படி தக் லைஃப் படத்தை கழுவி ஊற்றினால், நாளை காலை ப்ளூ சட்டை மாறன் எப்படி பாராட்டித் தள்ளப் போகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் வஞ்சப்புகழ்ச்சி அணியில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
வேஸ்ட் லைஃப்: தக் லைஃப் திரைப்படத்தை கமல்ஹாசன் மிகப்பெரிய அளவில் கடந்த சில மாதங்களாக புரமோஷன் செய்து வந்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் போல படத்தை வெற்றி பெற வைத்து விடலாம் என்று நினைத்து விட்டார். ஆனால், இந்தியன் 2 படத்தை விட மோசமாக இந்த படம் உள்ளது என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரும் விளாசித் தள்ளி வருகின்றனர். பிரசாந்த் ரங்கசாமி தனது விமர்சன வீடியோவில் தக் லைஃப் படத்துக்காக மணிரத்னம் கொஞ்சம் கூட மெனக்கெடவே இல்லை எனக் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் போட்ட உழைப்பு: கமல்ஹாசன் தான் இந்த கதையை எழுதியதாக பேட்டிகளில் கூறினார்கள். ஆனால், கமல்ஹாசன் கதையை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை மிகவும் அதிகமான உழைப்பை கொட்டி எடுத்தார். அதனால், தான் அந்த படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. ஆனால், எழுத்தில் மணிரத்னம் எந்தவொரு வேலையும் செய்யவில்லை. அப்படியே படம் ஃபிளாட்டாக உள்ளது. ரஃப் கட்டை முதலில் கட் செய்து அதன் பின்னர், ஃபைனல் கட் செய்வார்கள். மணிரத்னம் அப்படியெல்லாம் செய்யாமல் ரஃப் கட்டையே தியேட்டரில் விட்டு விட்டார் என்று தான் தோன்றுகிறது.
கடுப்பில் ஏ.ஆர். ரஹ்மான் பிஜிஎம் போட்டாரா?: தக் லைஃ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தார். ஆனால், அதையெல்லாம் மணிரத்னம் முழுமையாக படத்தில் வைக்காமல் கட் செய்து கெடுத்துவிட்டார். அந்த கடுப்போ என்னவோ தெரியவில்லை. இந்த படத்துக்கு இவ்வளவு தான் பிஜிஎம் போட முடியும் என கடுப்பில் ஏ.ஆர். ரஹ்மான் வாசித்தது போலத்தான் உள்ளது என்றார்.
RKFI நண்பர்கள் எதிரிகளாகி விடுவார்கள்: படத்தை ஒரு தடவை பார்த்ததற்கே தலைவலி வந்துவிட்டது. இன்னும் 4 தடவை எப்படி பார்க்கப் போகிறேனோ தெரியவில்லை. கமல் சாருக்கு சப்போர்ட் செய்வது வேற விஷயம். ஆனால், அதற்காக படம் நல்லா இருக்குன்னு பொய் சொல்ல முடியாது. இதனால், எனக்கு ராஜ்கமல் நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் எல்லாம் எதிரிகளாக மாறினாலும் மாறுவார்கள் என்று ஓபனாகவே உடைத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











