கேப்டன் மில்லர்ல புனீத் ராஜ்குமார் நடிச்சிருக்காரா?.. பிரபல விமர்சகரை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் புனீத் ராஜ்குமார் நடித்துள்ளார் என பிரபல விமர்சகர் விமர்சனம் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் மெட்டீரியலாக சிக்கிக் கொண்டது. கேப்டன் மில்லர் படம் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியானது. அந்த படத்தில் தீண்டாமைக்கு எதிராகவும், அதிகாரத்துக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போர் செய்ய வேண்டும் என்பதை மையக்கருவாக இயக்குநர் வைத்திருக்கிறார்.
ராக்கி, சாணிக் காயிதம் படங்களை போலவே இந்த படத்திலும் வன்முறையை கையில் எடுத்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன். படம் தொடங்கியதில் முதல் முடியும் வரை ஒரு 30 ஆயிரம் தோட்டாக்கள் வெடித்திருக்கும் போல தெரிகிறது. அதை விட அதிகமாகவும் இருக்கலாம் என்கிற உணர்வையே படம் முழுக்க நிரப்பி இருக்கிறார்.

ப்ளூ சட்டை விமர்சனம்: தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை பார்த்து விட்டு முதல் நாளிலேயே ப்ளூ சட்டை மாறன் இதெல்லாம் ஒரு படமா என கழுவி ஊற்றியிருக்கிறார். மேக்கிங் மட்டும் இருந்தால் போதுமா? குற்றாலத்துக்கு போய் விட்டு குழாய் தண்ணியில குளிச்சது மாதிரி படம் இருக்கு என வச்சு செய்து விட்டார். படத்தின் கதை மற்றும் திரைக்கதை நல்லாவே இல்லை என விமர்சித்துள்ளார்.
பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்: ஆனால், ப்ளூ சட்டைக்கு எதிர்மாறாக கேப்டன் மில்லர் படத்தை பாராட்டி விமர்சனத்தை கொடுத்திருந்தார் பிரசாந்த் ரங்கசாமி. இப்படியொரு படம் தமிழ் சினிமாவில் வந்தது பெரிய விஷயம் என்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் படத்தை செதுக்கிய விதமும் அவர் சொல்ல வந்ததை தைரியமாக சொன்னதற்கும் ஹேட்ஸ் ஆஃப் என சல்யூட் அடித்திருந்தார். தனுஷின் கடின உழைப்பையும் நடிப்பையும் பாராட்டிய அவர், இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுப்பவர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்றார்.
புனீத் ராஜ்குமார் பிரம்மாதம்: எல்லாத்தையும் நல்லா சொல்லி விட்டு சிவ ராஜ்குமாருக்கு பதிலாக மறைந்த அவரது சகோதரர் புனீத் ராஜ்குமார் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார் என பிரசாந்த் ரங்கசாமி விமர்சனத்தில் சொன்னதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். பிரசாந்த் ரங்கசாமியை பங்கமாக அந்த வீடியோ க்ளிப்பிங்கை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
எந்த ஊரு சரக்கு தெரியலையே: பிரசாந்த் ரங்கசாமி போட்டது எந்த ஊரு சரக்குன்னு தெரியலையே இப்படி பெயரை மாத்தி சொல்றாரே. ஜெயிலர் படத்தில் தான் சிவ ராஜ்குமார் நடித்தார் என குழந்தைகளுக்கே பதிவாகும் அளவுக்கு அவர் டிரெண்டான நிலையில், இப்படி பண்றாரே என கலாய்த்து வருகின்றனர்.

பிரசாந்த் ரங்கசாமி ட்வீட்: இந்த ட்ரோல் பெரிய அளவில் அவரது பெயரை கெடுத்து வரும் நிலையில், இனிமேல் அவசர அவசரமாக விமர்சனம் கொடுக்கப் போவதில்லை என்றும் குவாலிட்டி தான் முக்கியம் என பதிவிட்டுள்ளார். அதையும் தற்போது ரசிகர்கள் வேற லெவலில் கிண்டல் செய்து வருகின்றனர். அவசர அவசரமாக விமர்சனம் சொல்லும் போது வாய் தவறி வந்து விட்டது இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்கப்பா பாண்டா பாவம் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











