மனைவியை ஏன் பிரிந்தேன்.. கள்ளத்தொடர்பு கமெண்ட்.. ஓபனா எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்த பிரசாந்த்!
சென்னை: விஜய்யின் தவெக கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவாக பேசிக்கொண்டு வந்த விமர்சகர் இட்டிஸ் பிரசாந்த் விஜய்யின் விவாகரத்து தகவல்கள் மற்றும் நடிகை த்ரிஷாவுடன் அவர் திருமண விழாவுக்கு ஜோடியாக வந்ததை பார்த்து ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.
ஏகப்பட்ட விஜய் ரசிகர்களும் ரசிகைகளும் இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது தளபதி என கலாய்க்க ஆரம்பித்த நிலையில், இதற்கு திமுகவே எவ்வளவோ மேல் என பிரசாந்த் ரங்கசாமி திடீரென விஜய்க்கு எதிரான பதிவுகளை போட ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில், உன்னோட பொண்டாட்டி உன்னை விட்டுட்டு ஏன் போச்சு என விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் கேட்கத் தொடங்கிய நிலையில், தனது திருமண வாழ்க்கை மற்றும் மணமுறிவு உள்ளிட்ட தகவல்களை விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மனைவியுடன் விவாகரத்து: தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வந்தாலே மக்கள் இவரது விமர்சனத்தை தான் அதிகளவு தேடிப் பார்ப்பார்கள். ப்ளூ சட்டை மாறன் ஒரு நாள் கழித்து தான் விமர்சன வீடியோ வெளியிடுவார். ஆனால், பிரசாந்த் ரங்கசாமி திரைப்படம் வெளியான அன்றே அந்த படத்தை பற்றிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்களை உடனடியாக கொடுத்து விடுவார். விமர்சகராக வலம் வரும் பிரசாந்த் ரங்கசாமி டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி, எஃப்ஐஆர், டிடி நெக்ஸ்ட் லெவல் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்து குறித்து தற்போது விளக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மனைவியின் கண்ணியம் கெடாமல்: 2015ம் ஆண்டு தனக்கு திருமணம் நடைபெற்றது. 2020ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டோம். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மீண்டும் சேர்வதற்கான முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், அது செட்டாகவில்லை என்பதால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் எனக் கூறியுள்ளார். மேலும், தனது முன்னாள் மனைவியின் கண்ணியம் கெடும் விதத்தில் எங்கேயும் நடந்துக் கொள்ளவில்லை என்றும் பப்ளிசிட்டிக்காக அவரது பெயரை பயன்படுத்தவில்லை என்றும் கூறி விஜய்க்கு எதிரான தனது கருத்துக்களையும் முன் வைத்தார்.
கள்ளத்தொடர்பு கமெண்ட்: "நீ ஒருத்தி கூட கள்ள தொடர்புல இருந்ததுனால தான் உன் பொண்டாடி உன்ன விவாகரத்து பண்ணாங்கன்னு சொல்றாங்க... அதுக்கு பதில் சொல்லு" என விஜய் ரசிகர் ஒருவர் மோசமாக கமெண்ட் செய்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "வழக்கு விரவங்கள நீதிமன்றம் அனுமதிச்சா இங்க ஒரு நாள் பகிருவேன் ! அப்டி இல்லைனா , தேடி வந்து செருப்ப கழட்டி உன்ன அடிப்பேன் . வாங்கிக்கணும் ?" என பதில் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











