கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகலைன்னா இத்தனை கோடி நஷ்டமா?.. விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ட்வீட்!

சென்னை: ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், த்ரிஷா, அபிராமி, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் நாளை (ஜூன் 5) உலகம் முழுவதும் வெளியாகிறது. கர்நாடகாவில் நாளை படத்தை வெளியிட வில்லை என ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை என்றால் எவ்வளவு நஷ்டம் ஆகும் என பிரசாந்த் ரங்கசாமி தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. விக்ரம் படத்துக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் மாறியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் பேச்சை கடந்து போகாமல் பெரிய சர்ச்சையாக்கி கர்நாடகாவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கமல்ஹாசனின் உருவ படங்களை எரிப்பது, செருப்பால் அடிப்பது உள்ளிட்ட மோசமான செயல்கள் அரங்கேறி வருகின்றன.

Prashanth Rangaswamy says how many crores will loss Thug Life not released in Karnataka
Photo Credit:

கர்நாடகா உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டால், இந்த பிரச்னை முடிந்து விடுமே என அழுத்தம் கொடுத்த நிலையிலும், கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளாராக இருந்த போதும், கமல்ஹாசன் இறங்கி வராமல் தனது நிலையில் நிற்பதன் காரணமாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் சண்டைகளை கடந்து அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இத்தனை கோடி தான் நஷ்டமாகும்: கர்நாடகாவில் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை என்றால் சுமார் 15 கோடி அளவு தான் நஷ்டம் ஏற்படும் என பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதிகளவில் எக்ஸ்ட்ரா டிக்கெட்டுகளை வாங்கி படம் பார்த்தால், அதை நாம் சரிகட்டி விடமுடியும் என்றும் இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு துணையாக நிற்பதே நமது கடமை என்றும், குறைந்தது 5 தடவையாவது தியேட்டருக்குச் சென்று நான் படம் பார்ப்பேன் என பதிவிட்டுள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்: விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தக் லைஃப் படத்தை பலமுறை பார்த்து பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்ததற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. தக் லைஃப் படம் நல்லா இல்லை என்றால் விமர்சகரான நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை படம் பார்ப்பீர்களா? ஒரு முறை படத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள், ஆனால், பலமுறை பார்க்கச் சொல்வது சரியான அணுகுமுறை இல்லை என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X