விஜய்யை எதிர்த்து மொக்கை வாங்கியதால் மொட்டை போட்ட பிரசாந்த் ரங்கசாமி.. பாண்டே சொன்னதை செய்வாரா?

சென்னை: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விஜய் பெரும்பான்மையை நிரூபித்தால் தான் மொட்டை போடுவதாக சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி சொன்ன நிலையில், விஜய் வென்று விட்டார். மொட்டை போடுவீங்களா என ரசிகர்கள் கலாய்த்த நிலையில், மொட்டை போட்டுவிட்டார் பிரசாந்த் ரங்கசாமி.

ஆரம்பத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்த பிரசாந்த் ரங்கசாமி கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்துக்குப் பிறகு விஜய்யை எதிர்த்து பேசத் தொடங்கினார். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு எக்ஸிட் போல் முடிவுகளின் போதே விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.

Prashanth Rangaswamy tonsure his head after Vijay s Great Victory

மொட்டை போட்ட பிரசாந்த்: விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவையே வீழ்த்தி 108 இடங்களில் விஜய்யின் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிரசாந்த் ரங்கசாமி மொட்டை போடுவாரா என கேள்விகள் கிளம்பின. இந்நிலையில், "சத்தியமா சொன்னது சொன்னது தான்.. ஹேப்பியா பண்ணலாம்" என விஜய்க்கு எதிராக பேசிய பிரசாந்த் ரங்கசாமி மொட்டை போட்டுக் கொள்வதாக உறுதியளித்த நிலையில், நேற்று இரவே மொட்டை போட்டு அதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

ரங்கராஜ் பாண்டே சொன்னதை செய்வாரா?: பிரசாந்த் ரங்கசாமி மானஸ்த்தன் அவர் சொன்னது போலவே மொட்டை போட்டு விட்டார். ரங்கராஜ் பாண்டே போன்ற ஆட்கள் அரசியல் பேசுவதையே நிறுத்தி விடுவேன் என்றும் ட்விட்டரை விட்டு ஓடி விடுவேன் என்றெல்லாம் சொன்னாங்க. அவங்க நிலைமை தான் ரொம்ப மோசமா இருக்கு. பரவாயில்லை தொடர்ந்து இனிமேல் விஜய்க்கு ஆதரவாக பேசட்டும். ஆரம்பத்தில் கஷ்டமாத்தான் இருக்கும். போக போக பழகிடும் என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜய் பதவி ஏற்பது எப்போது?: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்க அவருக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லை. 108 இடங்கள் தான் உள்ளன. அதனால், வெற்றிப் பெற்ற மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தவெக அரசை விஜய் நிலை நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்துக்குள் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X