பாண்டா ஜனதா பார்ட்டி.. நீங்க சொன்னா நான் பிரதமர்.. லாரன்ஸை கலாய்த்த பிராசாந்த் ரங்கசாமி

சென்னை: தமிழ் திரையுலகில் இருந்து முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது காலம் காலமாகத் தொடரும் ஒரு ட்ரெண்ட். அந்த வரிசையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத சூழலில் இன்று காலை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அரசியல் வீடியோவும், அதற்குப் போட்டியாக சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்டுள்ள கலாய் வீடியோவும் சமூக வலைத்தளங்களை மொத்தமாக ஆக்கிரமித்து பயங்கர வைரலாகி வருகின்றன.

"மக்களாகிய நீங்க சொன்னா நான் அரசியலுக்கு வரத் தயார்" என்று லாரன்ஸ் உருக்கமாகப் பேச, மறுபுறம் "நான் ரொம்ப நல்லவன், என்னை பிரதமராக்குங்க" என்று பிரசாந்த் ரங்கசாமி அவரை அச்சு அசலாகக் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, இயக்குநராக, நடிகராக முத்திரை பதித்து, பின்னாளில் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை தனது அறக்கட்டளை மூலமாகச் செய்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் ரஜினி அண்ணனுடன் அரசியல் பயணம் செய்யலாம் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் தனது அம்மா தடுத்ததால் அதைத் தவிர்த்ததாகவும் அவரே பல மேடைகளில் உருகியுள்ளார். இப்படி இருக்கையில் தான், இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் லாரன்ஸ்.

தனது நண்பன் விஜய் கட்சி ஆரம்பித்து, முதலமைச்சர் ஆனதுக்கு அப்புறம் தான் தனது அம்மாவுக்கே மனசு மாறி தனக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதாக நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். "அதனால மக்களாகிய நீங்க 'வாடா தம்பி'னு சொன்னா நான் அரசியலுக்கு வர தயார். நீங்க வேண்டாம்னு சொன்னா நான் வரல" என்று லாரன்ஸ் உருக்கமாகப் பேசிய வீடியோ இன்னும் டிரெண்டிங்கில் தான் உள்ளது.

Prashanth Rangaswamy Trolls Raghava Lawrence s Political Entry With Panda Janata Party Video

மலைபோல் குவிக்கப்படும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லாரன்ஸ் நின்றுகொண்டிருக்க, சில மணி நேரங்களிலேயே அவரை மறைமுகமாக வறுத்தெடுக்கும் விதமாக, பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அரசியல் ஆசையை செம்மையாகக் கலாய்த்துள்ளார். லாரன்ஸின் இந்த "நான் நல்லவன், மக்கள் சொன்னா அரசியலுக்கு வருவேன்" என்ற பாணியை அப்படியே அச்சு அசலாக, அவரது உடல்மொழியோடு கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார் பிரசாந்த்.

பாண்டா ஜனதா பார்ட்டி: அந்த வீடியோவில் பேசிய பிரசாந்த் ரங்கசாமி, "மக்களே, நான் வந்து இந்தியாவின் பிரதமராகலாம்னு இருக்கேன். ஏன்னா, நான் ஏகப்பட்ட நல்லது பண்ணியிருக்கேன். எனக்கு வந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யைத் தெரிஞ்சவங்களையும் நல்லா தெரியும், ஏன்... பாரத பிரதமர் நரேந்திர மோடியைத் தெரிஞ்சவங்களையும் எனக்கு நல்லா தெரியும்! இப்போ இங்க 'காக்கரோச் ஜனதா பார்ட்டி' அப்படின்னு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காங்க இல்ல? அதே மாதிரி நான் புதுசா 'பாண்டா ஜனதா பார்ட்டி' அப்படின்னு ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்று நக்கலாகப் பேசியுள்ளார்.

Prashanth Rangaswamy Trolls Raghava Lawrence s Political Entry With Panda Janata Party Video

வடக்குக்கு சென்று: நேரா வடக்கு பக்கமெல்லாம் போய், அங்க இருக்குற விஷயங்களையெல்லாம் கத்துக்கிட்டு, இந்தியா முழுக்கப் பிரச்சாரம் செஞ்சு தான் பிரதமராகலாம்னு முடிவு பண்ணியிருப்பதாகக் கூறிய பிரசாந்த், "நான் ரொம்ப நல்லவன்! இப்போ நான் கேக்குறது என்னன்னா, நீங்க ஒரு பத்து பேர் சேர்ந்து என்கிட்ட 'நீங்க பிரதமராகுங்க பிரசாந்த்' அப்படின்னு சொன்னீங்கன்னா, நாளைல இருந்தே நான் இந்தியாவுக்கு பிரதமராக ரெடியா இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?" என்று லாரன்ஸ் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கதறவிட்டுள்ளார்.

நக்கல்: ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சியாக வெளியிட்ட வீடியோவை, பிரசாந்த் ரங்கசாமி தனது பாணியில் 'பாண்டா ஜனதா பார்ட்டி' என்று நக்கல் செய்து வீடியோ வெளியிட்டிருப்பது நெட்டிசன்களுக்கு செம்ம தீனியாக அமைந்துள்ளது. லாரன்ஸின் அரசியல் எண்ட்ரி குறித்த விவாதங்களுக்கு மத்தியில், பிரசாந்த் ரங்கசாமியின் இந்த கலாய் வீடியோ தற்போதைய ஹாட் டாபிக்காக மாறி, இணையத்தைக் குலுங்கச் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X