விஜய்யையா சேற்றுல தள்ள பாக்குறீங்க?.. மக்களைப் பற்றி தெரியாம இதை செஞ்சுட்டீங்களே.. பிரபலம் போஸ்ட்!
சென்னை: நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் அதை கண்டுபிடித்து கண்டித்த பின்னரும் அவர் அதைத் தொடர்ந்தார். எனவே எங்களது திருமண பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இது திரையுலகில் மட்டுமல்லாமல், அரசியல் தளத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரவலான பேசு பொருளாக மாறியுள்ளது.
இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியல் உள்ளது என்று எல்லாம் பேசி வருகிறார்கள். மேலும் சில பிரபலங்களும் கூட சங்கீதா செய்தது தவறு, விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருந்தாலும், அதை வெளியே கொண்டு வந்திருக்க கூடாது என்று எல்லாம் பேசி வருகிறார்கள்.

கடும் விமர்சனம்: இப்படி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் ஒரு பெண்ணின் கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று கூறினால், அதற்கு ஆதாரம் உள்ளது என்று கூறினால் இப்படித்தான் நீங்கள் எல்லாம் பொருத்துப் போ என்று அறிவுரை சொல்லுவீர்களா என்று பளார் கேள்விகளை வீசி வருகிறார்கள்.
பிரசாந்த் ரங்கசாமி: இப்படி இருக்கையில் இந்த விவகாரம் அரசியல் தளத்தில் பெரிய பேசு பொருளாகும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழ்நாடு அரசியல் களம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் பகடைக்காயாக மாற்றும் அளவுக்கு மோசமான அரசியல் களம் அல்ல என்பதை நிரூபித்து விட்டது. இப்படி இருக்கையில் பிரபல விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், அவர்கள் விஜய்யை சேற்றில் தள்ளிவிடப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள்தான் சேற்றில் விழுந்து போனார்கள். இந்த விவகாரத்தில் மக்களுக்கு தெளிவான பார்வை உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் அவர்கள் விஜய்க்கு ஆதரவாக முன்பை விட கூடுதலாக நிற்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையவாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











