»   »  'நடுவுல நிக்குற பேய்’... மீண்டும் "ஷாக்" தரும் பிரசாந்த்!

'நடுவுல நிக்குற பேய்’... மீண்டும் "ஷாக்" தரும் பிரசாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாகசம் படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு, ‘நீயும் நானும் நடுவுல பேயும்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவை தற்போது விதவிதமான பேய்கள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் முன்னணி நடிகர், நடிகைகளும் இது போன்ற திகில் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது இந்தப் பட்டியலில் பிரசாந்தும் இணைந்துள்ளார்.

ஷாக்...

ஷாக்...

தனது ஷாக் படம் மூலம் தமிழ் சினிமாவில் பேய் டிரண்டைத் துவக்கி வைத்ததே நான் தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரசாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் புதிய பேய்ப்படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

நடுவுல பேய்...

நடுவுல பேய்...

அப்படத்திற்கு நீயும் நானும் நடுவுல பேயும் என வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜை எளிமையாக நடந்துள்ளது.

சாகசம்...

சாகசம்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான பிரசாந்தின் சாகசம் படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. இதனால், டிரண்டிற்கு ஏற்ப பேய்ப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்தும் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரசாந்த்.

பேய்ப்படங்களின் வெற்றி...

பேய்ப்படங்களின் வெற்றி...

சமீபத்தில் வெளியான பேய்ப்படங்கள் எல்லாமே ஓரளவிற்கு வெற்றிப்படங்களாகத் தான் அமைந்துள்ளது. இதனால், இந்தப் பேயும் பிரசாந்திற்கு கை கொடுக்கும் என நம்பலாம்.

English summary
Actor Prashanth 's Next Tamil film is titled as Neeyum Naanum Naduvula Peiyum.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil