Thalapathy 68: விஜய்க்கு இணையாக டான்ஸில் டஃப் கொடுத்தாரா பிரசாந்த்? பிரபுதேவா என்ன பண்ணாரு தெரியுமா?

சென்னை: டாப் ஸ்டார் பிரசாந்த் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் இணைந்து நடித்து வரும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா என நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. செம கலகலப்பான அதே சமயம் வித்தியாசமான பிரம்மாண்ட கதையம்சத்துடன் இந்த முறை வெங்கட் பிரபு மெகா விருந்தே கொடுக்க ரெடியாகி உள்ளார்.

பிரசாந்த் கம்பேக் கொடுக்க அந்தகன் படத்தில் அவரது அப்பா இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படம் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

Prashanth suffers to match the speed of Vijay in Thalapathy 68 song details leaked

இந்நிலையில், பிரசாந்தை மீண்டும் தளபதி 68ல் ரசிகர்கள் பார்த்து ரசிக்க உள்ளனர். பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற பாடல் காட்சியில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்தும் நடனமாடியுள்ளாராம்.

திருமணத்தால் சரிந்த சாம்ராஜ்யம்: விஜய், அஜித்துக்கு எல்லாம் மேலாக 90ஸ் ரசிகர்களின் கனவுக் கண்ணனாக திகழ்ந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். ஒரு பொய்யாவது சொல் கண்ணே என அவர் பாட ஆரம்பித்ததும் காதலில் உருகாதவர்களே இருக்க முடியாது. கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், ஜோடி, வின்னர் என பட்டையை கிளப்பி வந்த பிரசாந்த் திருமணம் செய்து கொண்டதில் ஏற்பட்ட மனவேதனை காரணமாக அவரது நடிப்பு சாம்ராஜ்யமே ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டது.

அந்தகன் எப்போ வரும்?: இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி ஹிட்டான அந்ததுன் படத்தை தமிழில் அந்தகன் என ரீமேக் செய்து நடித்துள்ளார் பிரசாந்த். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் மற்றும் வில்லியாக சிம்ரன் நடித்துள்ளனர். பிரசாந்த் அப்பாவும் பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான தியாகராஜன் அந்த படத்தை இயக்கி வரும் நிலையில், இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்து வருகிறது.

Prashanth suffers to match the speed of Vijay in Thalapathy 68 song details leaked

திணறிய பிரசாந்த்: தளபதி 68ல் விஜய்யுடன் எடுத்த எடுப்பிலேயே பாடல் காட்சியில் நடனம் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த பாடல் காட்சியில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அஜ்மலுக்கு சும்மா வந்து போகும் சீன் தானாம். ஆனால், பிரசாந்த் தளபதி விஜய்யுடன் போட்டிப் போட்டு ஆட வேண்டிய நிலையில், ரொம்பவே திணறிய நிலையில், பிரபுதேவா அவருக்கு ஏற்றவாறு சூப்பரான ஸ்டெப்ஸ்களை மாற்றியமைத்து கொடுத்துள்ளதாகவும், தாறுமாறான ஸ்பீட் ஸ்டெப்களை விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து ஆடியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

பக்கா ட்ரீட்: இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மைக் மோகன் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரசாந்த்தும் ஒருவேளை சீக்ரெட் வில்லனாக இருப்பாரா? அதுதான் ட்விஸ்ட்டா? என்றும் இப்பவே ரசிகர்கள் கெஸ் பண்ண ஆரம்பித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் அதுவும் தளபதி விஜய் படத்தில் நடித்தால் வேற லெவல் என்ட்ரியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் பக்கா ட்ரீட்டை வெங்கட் பிரபு கொடுப்பார் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X