Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இசையமைப்பாளர் தமனுக்கு டொயோட்டோ ஃபார்ச்சூனர் கார் பரிசளித்த பிரசாந்த்
இசையமைப்பாளர் தமனுக்கு 31 வது பிறந்நாளை ஒட்டி 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளித்துள்ளார் பிரசாந்த்.
பிரஷாந்த் நடிப்பில், அவருடைய அப்பாவும் பிரபல நடிகருமான தியாகராஜன், மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘சாஹசம்'. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சாஹசம் படத்தில் அனைத்துப் பாடல்களையும் தமன், மிகச் சிறப்பாக இசையமைத்துக் கொடுத்துள்ளாராம். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாவதுடன், படத்திற்கும் பலம் சேர்க்கும் வகையில் உள்ளதால், தியாகராஜனும், பிரசாந்தும் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.
இந்த சந்தோசத்தோடு தமனின் பிறந்தநாளை, தியாகராஜன், பிரசாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் மிகப் பெரிய அளவில் சமீபத்தில் கொண்டாடினார்கள். திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் தமன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சாஹசம் குழுவினருடன் சேர்ந்து கொண்டாடினார். அப்போது தமனுக்கு பிறந்தநாள் பரிசாக டெயோட்டோ ஃபார்ச்சூனர் கார் ஒன்றை அவர் வாங்கிக் கொடுத்தார் பிரசாந்த்.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், தயாரிப்பாளர்கள் எல்.எம்.எம் முரளி, ஜே.எஸ்ச.சதீஷ், டி.சிவா, ஒளிப்பதிவாளர்கள் செளந்தர், பப்பு, இயக்குநர் மதி, கலை இயக்குநர் மிலன், பின்னணி பாடகிகள் திவ்யதர்ஷினி, ரீதா, மானஷி,, மேஹா, ரனிலா ரெட்டி, சுஜித்ரா, மோனிஷா, பாடகர்கள் விஜய் பிரகாஷ், ரஞ்சித், ஆலப் ராஜ், ராகுல் நம்பியார் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.