Prashanth: விஜய்யின் GOAT கொடுத்த ஹைப்.. 3 படங்களில் கமிட்டான டாப் ஸ்டார் பிரசாந்த்.. செம்ம கம்பேக்
சென்னை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில், விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். 90களில் டாப் ஸ்டாராக கலக்கிய பிரசாந்த் GOAT படத்தில் எப்படி கம்பேக் கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், GOAT கொடுத்த ஹைப் காரணமாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதாக பிரசாந்த் கூறியுள்ளார்.
கம்பேக் கொடுக்கும் டாப் ஸ்டார் பிரசாந்த்
வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசாந்த். செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், சாக்லேட், ஜோடி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களால் டாப் ஸ்டராக கொண்டாடப்பட்டார். திருமணத்திற்குப் பின்னர் ஃபீல்ட் அவுட் ஆன பிரசாந்த், கடைசியாக அந்தகன் படத்தில் நடித்தார். ஆனால் அது இன்னும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய்யின் GOAT - தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்தும் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகிறது GOAT. விஜய், பிரசாந்த் ஆகியோருடன் மோகன், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், யுவன் இசையமைக்கிறார்.
தற்போது பவதாரிணி மறைவு காரணமாக GOAT படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் ஸ்பெஷலாக வெளியான GOAT போஸ்டரில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் இருந்தது ரசிகர்களிடம் ஹைப் கொடுத்தது. இதனால் விஜய்யின் நண்பனாக பிரசாந்த் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளில் விஜய்க்கு டஃப் கொடுத்து பிரசாந்த் டான்ஸ் ஆடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி சமீபத்தில் வெளியான அப்டேட் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த பிரசாந்த், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பின்னர், கோயிலில் தரிசனம் செய்ததாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம் GOAT திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பிரசாந்த், GOAT ஷூட்டிங் நல்லபடியா போய்கொண்டு இருப்பதாகக் கூறினார். இதனையடுத்து சமீபத்தில் பிரசாந்த் கொடுத்த பேட்டி ஒன்றில் தொடர்ந்து நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் 3 படங்களில் கமிட்டாகியுள்ளதாக பிரசாந்த் தெரிவித்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனால் GOAT திரைப்படம் மூலம் பிரசாந்த் மீண்டும் செம்ம கம்பேக் கொடுக்க ரெடியாகிவிட்டார்.


Click it and Unblock the Notifications