Prashanth: விஜய் அரசியல் குறித்த கேள்வி.. சட்டென செய்தியாளரை மடக்கிய டாப் ஸ்டார் பிரசாந்த்!

சென்னை: வார்த்தைக்கு வார்த்தை விஜய் சார் என போட்டு அன்பும் மரியாதையும் கலந்து நடிகர் டாப் ஸ்டார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதே ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முன்னதாக ஒரு பேட்டியில் பிரசாந்த் பேசும்போது நானும் விஜய்யும் இணைந்து நடிக்கிறோம் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது ஒரு பேச்சு சாமார்த்தியம் புகுந்து விளையாடுகிறது.

90-களில் விஜய் மற்றும் அஜித்துக்கு முன்னோடியாக டாப் ஸ்டார் இந்த பட்டத்துடன் வலம் வந்தவர் பிரசாந்த். ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை மிகப்பெரிய பிரச்சனையாக முடிந்த நிலையில், சினிமாவிலும் மார்க்கெட்டை இழந்தார். பெரிய இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நடித்து வருகிறார்.

Prashanth welcomes Vijays Politics and talks about GOAT movie too

தளபதியுடன் டாப் ஸ்டார்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் தளபதியுடன் இணைந்து டாப் ஸ்டார் பிரசாந்தும் நடித்து வருகிறார். விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி சௌத்ரி, வைபவ் மற்றும் ரேஞ்சு உள்ளிட்ட பல இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்து வரும் நிலையில், அதன் போஸ்டர்களும் வெளியாகி உள்ளன.

சகோதரர்னே சொல்லலாம்: விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நடித்து வரும் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், விஜயின் அரசியல் குறித்தும் கோட் திரைப்படம் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. நண்பர் விஜய்யுடன் நடிக்கிறீங்களே எழுப்பப்பட்ட கேள்விக்கு சகோதரர்னே சொல்லலாம் என க்யூட்டாக பதில் அளித்தார் பிரசாந்த்.

Prashanth welcomes Vijays Politics and talks about GOAT movie too

கோட் குடும்ப படமா?: செய்தியாளர் ஒருவர் கோட் திரைப்படம் குடும்ப படமா என்கிற கேள்வியும் முன் வைத்த நிலையில், அப்படியா? என்கிற கேள்வி எழுப்பிய பிரசாந்த் நீங்கதான் படத்தின் கதையை சொல்லணும் என அந்த செய்தியாளரை மடக்கி விட்டார். படம் ரிலீஸ் ஆகட்டும் தியேட்டருக்கு சென்று அதைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க, அதற்கு முன்பாக அந்தப் படம் இப்படியா அந்த படம் அப்படியே என ஏகப்பட்ட குழப்பங்களுக்கு ஆளாகி ஒரு படத்தை பார்க்க வேண்டாம் எனக்கு தெளிவாக கூறிவிட்டார்.

விஜய் அரசியல் பற்றி: விஜய் எப்போதுமே நல்லது செய்ய நினைப்பவர். அவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். அவருக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் என்றார் பிரசாந்த். கோட் படத்தின் சூட்டிங் இடைவேளையில் அரசியல் பத்தி பேசிப்பீங்களா என ஒரு செய்தியாளர் கேட்க, நாங்க பேசுவோம்.. ஆனால், உங்க நண்பரோட நீங்க பேசுறதை இங்கே சொல்லுங்கனா சொல்லுவீங்களா எனக் கேட்டு அந்த செய்தியாளரையும் ஸ்கெட்ச் போட்டு மடக்கி விட்டார்.

அந்தகன் ரிலீஸ் எப்போ?: இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த அந்ததுன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் என ரீமேக் செய்து நடித்துள்ளார் பிரசாந்த். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தும் வில்லியாக சிம்ரனும் நடித்துள்ளனர். அந்த படம் முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. சரியான நேரம் பார்த்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக பிரசாந்த் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X