Thalapathy 68 - தளபதி 68.. ஓவர் ஆட்டிட்யூட் காட்டுகிறாரா பிரசாந்த்?.. கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுடுவாரோ?..

சென்னை: Thalapathy 68 (தளபதி 68) தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு பல கண்டிஷன்களை பிரசாந்த் தரப்பு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25ஆவது படமாக இதை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prashanths side has put many conditions to act in Thalapathy 68

என்ன கதை?: இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. முதலில் அரசியல் கதை என்று கூறப்பட்ட சூழலில் அதை வெங்கட் பிரபு மறுத்தார். தற்போது இந்தப் படம் தந்தை, மகன் இடையே நடக்கும் எமோஷன்தான் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அமெரிக்காவில் விஜய்யின் உடம்பை ஸ்கேன் செய்த புகைப்படத்தோடு எதிர்காலத்துக்கு வருக என வெங்கட் பிரபு கேப்ஷன் போட்டதால் ஒருவேளை இது சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரிலும், டைம் ட்ராவல் ஜானரிலும் உருவாகலாமோ என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சில நாட்கள் பிரேம்ஜி அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேரத்தை பதிவு செய்துகொண்டே இருந்தார். இதனால் அதனையும், எதிர்காலத்துக்கு வருக என்ற வெங்கட்டின் கேப்ஷனையும் முடிச்சு போட்டு ரசிகர்கள் இது டைம் ட்ராவல் கதையாக இருக்கலாம் என கணிக்க தொடங்கியிருக்கின்ன்றனர்.

யார் யார் நடிக்கிறார்கள்?: இந்தச் சூழலில் படத்தில் ஜெய், பிரேம்ஜி, ப்ரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கலாம் என தெரிகிறது. மேலும் வயதான விஜய்க்கு ஜோடியாக முதலில் ஜோதிகாவிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்றும் அடுத்ததாக சினேகாவிடம் பேச்சு நடத்தி அவரை லாக் செய்திருக்கிறார்கள் என்றும் கோடம்பாக்கத்தில் தகவல் சிறகடிக்கிறது.

பிரசாந்த், பிரபுதேவா?: இதற்கிடையே இன்னொரு தகவலும் வெளியானது. அதாவது இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த்தையும், பிரபுதேவாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறதாம். பிரசாந்த் இப்போது மார்க்கெட் இழந்து இருக்கிறார். எனவே இப்படத்தில் நடித்தால் ரீ எண்ட்ரிக்கும், தன்னுடைய அந்தகன் படத்துக்கும் ப்ரோமோஷனுக்கும் யூஸ் ஆகும் என்பதால் இதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவிப்பார் என்றே பலரும் பேசினர்.

ஓவர் ஆட்டிட்யூட்: இந்நிலையில் அவர் இந்தப் படத்தில் கமிட்டாவது தொடர்பான புதிய முணுமுணுப்புக்கள் எழ தொடங்கியிருக்கின்றன. அதன்படி பிரசாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் படக்குழுவிடம் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுவருகிறார்கள். அதிலும் தியாகராஜன், "பிரசாந்த் 30 நாட்களுக்கு கால்ஷீட் கொடுப்பார். அப்போது அவர் நடித்த எந்தக் காட்சியையும் எடிட்டிங்கில் தூக்காமல் படத்தில் வைக்க வேண்டும்" என ஸ்ட்ரிக்ட்டாக கூறுகிறாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு பிரசாந்த்தை கழற்றிவிட்டுவிடலாம் என்ற எண்ணத்துக்கு விரைவில் வந்தாலும் வரலாம் என்கின்றனர் திரைத்துறையினர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிரசாந்த் விஜய் படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தால் அதற்கான வரவேற்பே வேறு மாதிரி இருக்கும். எனவே பந்தா காண்பிக்காமல் கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X