மாயா, கேம் ஒவர் படங்களுக்குப் பிறகு அடுத்தும் அட்டகாச த்ரில்லர்... சமந்தாவுடன் இணைகிறார் பிரசன்னா

By

Recommended Video

Kaathuvaakula Renduu Kaadhal | Vignesh Shivan | Nayanthara | Samantha | VJS

சென்னை: நடிகை சமந்தா நடிக்கும் த்ரில்லர் கதையை கொண்ட படத்தில் பிரசன்னாவும் இணைந்துள்ளார்.

நயன்தாரா, ஆரி, லட்சுமி பிரியா, சந்திரமவுலி உட்பட பலர் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம், மாயா.

அஸ்வின் சரவணன் இயக்கி இருந்த இந்தப் படம், நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

சைக்காலஜி த்ரில்லர்

சைக்காலஜி த்ரில்லர்

இதையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கிய படம், கேம் ஓவர். டாப்ஸி, வினோதினி, சஞ்சனா, ரம்யா சுப்ரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர். ஒய்நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் இதைத் தயாரித்திருந்தார். சைக்காலஜி த்ரில்லர் படமான இது, இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி வரவேற்ப்பை பெற்றது.

சமந்தா ஹீரோயின்

சமந்தா ஹீரோயின்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்தும் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தை இயக்க இருக்கிறார் அஸ்வின் சரவணன். இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு சமந்தாவிடம் கதை சொல்லிவிட்டு வந்தார் இயக்குனர். அப்போது கதை பிடித்திருப்பதாகவும் நடிக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் சமந்தா.

வில்லத்தனம்

வில்லத்தனம்

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கிறது. இப்போது இந்தப் படத்தில் நடிகர் பிரசன்னாவும் இணைந்திருக்கிறார். த்ரில்லர் படமான இது, அஸ்வின் சரவணன் இயக்கிய முந்தைய த்ரில்லர் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் பிரசன்னாவின் வேடம் கொஞ்சம் வில்லத்தனம் நிறைந்தது.

காத்துவாக்குல

காத்துவாக்குல

சமந்தா ஹீரோயினாக அறிமுகமான 'பாணா காத்தாடி' படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் அவருடன் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னையில் நடக்க இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார் சமந்தா. இந்தப் படத்துக்கு பிறகு அஸ்வின் சரவணன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X