Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இன்றைய அரசியலை தோலுரிக்கும் பிராஸ்தானம் - சஞ்சய்தத் மாஸ் காட்டுகிறார்
மும்பை: ஒரு படம் ஒரு மொழியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் வசூலையும் பெற்றால், உடனடியாக மற்ற மொழிகளில் அந்தப் படத்தை டப் செய்யவோ அல்லது ரீமேக் செய்யவோ வரிசை கட்டி நிற்பார்கள். அதே கதை தான் இப்போதும் நடந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிராஸ்தானம் படத்தை இந்தியில் நடிகர் சஞ்சய் தத் ரீமேக் செய்துள்ளார். அவரது மனைவியே தயாரிக்கும் இந்த படத்தில் அரசியல் அதிரடிகள் நிறைந்துள்ளது. இப்படத்தின் டைட்டில் ட்ராக் நேற்று வெளியானது.
இந்தியில் பூமி படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்த நடிகர் சஞ்சய் தத் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார். அதன் ஒரு பகுதியாக இப்போது கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி அபார வெற்றி பெற்ற பிராஸ்தானம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யபோகிறார்.
சஞ்சய் தத் தனது சொந்த தயாரிப்பான சஞ்சய்.எஸ்.தத் புரொடக்சன்ஸ் சார்பில் மன்யதா தத் தயாரிப்பில் நடித்து வெளியாக இருக்கும் அரசியல் சார்ந்த அதிரடி ஹிந்தி திரைப்படம் பிராஸ்தானம். இப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அதிரடி ட்ரைலர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் மனிஷா கொய்ராலா, ஜாக்கி ஷெராஃப், சுன்கி பாண்டே , அலி பாசல், அமைரா தஸ்தூர், சத்தியஜீத் துபே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வெளியான அடுத்த நாளான இன்றே படத்தின் டைட்டில் ட்ராக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் கடந்து செல்லும் முழு பயணத்தையும் சித்தரிக்குமாறு அமைந்துள்ளது.
சீட்டு மோசடியில் அம்மா கைது.. சோகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின் ?
இப்பாடலின் வரிகளை எழுதி இசையமைத்திருக்கிறார். தேவ் நேகியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலானது அரசியல் சூழ்நிலைக்கு தகுந்த குரலாக அமைந்திருக்கிறது. பாடலின் வரிகள் ட்ரைலருக்கு மிகவும் பொருத்தமாகவும் கம்பீரமாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். இடத்தின் ட்ரைலரும் டைட்டில் ட்ராக்கும் அடுத்தடுத்து வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.