80ஸ் ரீயூனியன்.. என்னைய மட்டும் கூப்பிடலையே.. நான் அவ்வளவு மோசமானவனா? வருத்தத்தில் பிரபல நடிகர்!

நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காதது வருத்தமளிப்பதாக நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் கூறியுள்ளார்.

Recommended Video

80's Celebrity Get togather of South Indian cinema

சென்னை: நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு விடுக்காதது குறித்து நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பொற்காலம் என கருதப்படுவது 1980கள் தான். அந்த காலகட்டத்தில் தான் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமா பெரிய வளர்ச்சி கண்டது.

அந்த காலகட்டத்தில் அறிமுகமான நடிகர்கள் தான் இன்றும் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன் லால், சிரஞ்சீவி, ராதிகா உள்ளிட்ட பலர் இதற்கு உதாரணம்.

நடிகர் - நடிகைகள் சந்திப்பு

நடிகர் - நடிகைகள் சந்திப்பு

80-களில் திரையுலகில் கோலோச்சிய நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அந்த சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் நடந்தது.

நட்சத்திரங்கள் பங்கேற்பு

நட்சத்திரங்கள் பங்கேற்பு

இதில் நடிகர்கள் ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதாப் போத்தன் வருத்தம்

பிரதாப் போத்தன் வருத்தம்

இந்நிகழ்ச்சியில் 80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன், இந்த நடிகர் நடிகைகள் சந்திப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காதது குறித்து மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

மோசமான நடிகன்

மோசமான நடிகன்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், " 80களின் நடிகர்களில் நான் மோசமான நடிகராகவும், இயக்குனராகவும் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் என்னை அழைக்கவில்லை என நினைக்கிறேன். இது எனக்கு வருத்தம் தான்", என குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி இயக்குனர்

வெற்றி இயக்குனர்

பாலு மகேந்திராவின் மூடு பனி, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். பின்னர் கமல் நடித்த வெற்றி விழா, பிரபு நடித்த மை டியர் மார்த்தாண்டான், கார்த்திக்கின் லக்கி மேன், சத்யராஜின் ஜீவா, ராம்கி நடித்த ஆத்மா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது படங்களில் அப்பா கதாபத்திரங்களில் அவர் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X