பிரதாப் போத்தனின் கடைசி படம் காபி வித் காதல்.. நல்ல நண்பரை இழந்து விட்டேன் என குஷ்பு உருக்கம்!

சென்னை: நடிகை குஷ்புவின் தயாரிப்பில் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல் படத்தில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன் என உருக்கமான பதிவு போட்டுள்ளார் குஷ்பு.

Recommended Video

Prathap pothen Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், குஷ்பு நடித்த வெற்றி விழா திரைப்படம் அப்பவே 175 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

பிரதாப் போத்தன் உடன் நல்ல நட்புறவை வளர்த்து வந்த நடிகை குஷ்பு அவரது மறைவு செய்தியை அறிந்து பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்.

ராதிகா தயாரிப்பில்

ராதிகா தயாரிப்பில்

நடிகராக அசத்தி வந்து பிரதாப் போத்தன், திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குநராகவும் பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாவுக்கு கொடுத்துள்ளார். நடிகை ராதிகா தயாரித்த மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அந்த படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பிரதாப் போத்தன்.

பிரதாப் போத்தன் இயக்கத்தில் குஷ்பு

பிரதாப் போத்தன் இயக்கத்தில் குஷ்பு


1989ம் ஆண்டு கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு நடிப்பில் வெளியான வெற்றி விழா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. பிரதாப் போத்தன் இயக்கத்தில் நடித்த நடிகை குஷ்பு பல ஆண்டுகளாக அவருடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிரதாப் போத்தன் மறைவு செய்தி அறிந்ததும் துடித்துப் போன அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் மிக உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

நல்ல நண்பரை இழந்துவிட்டேன்

நல்ல நண்பரை இழந்துவிட்டேன்

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் அதிர்ச்சியான செய்தி இது, நல்ல நண்பரை இழந்து விட்டேன். மிகவும் நல்ல மனிதர் மற்றும் ஜாலியான நபர். அவரை இழந்து வாடுவது ரொம்பவே வருத்தமளிக்கிறது. தற்போதாவது அவர் ஆன்மா நிம்மதி அடையட்டும் என உருக்காமான பதிவை போட்டு இருக்கிறார் குஷ்பு.

காபி வித் காதல்

காபி வித் காதல்

குஷ்பு தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, அம்ரிதா, சம்யுக்தா, பிக் பாஸ் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் காபி வித் காதல் படத்திலும் பிரதாப் போத்தன் சிறப்பான கதாபாத்திரத்தில் அவருக்கே உரித்தான அதே சிரிப்புடன் நடித்துள்ளார் என்கிற தகவலையும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஷேர் செய்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோகன்லால் படத்திலும்

மோகன்லால் படத்திலும்

கடைசியாக தமிழில் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதாப் போத்தன், மலையாளத்தில் மம்மூட்டியின் சிபிஐ 5 தி பிரைன் படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில், விரைவில் வெளியாக உள்ள மோகன்லால் இயக்கி நடித்து வரும் பரோஸ் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X