ரஜினியையே அலேக்காக தூக்கிய பிரதாப் போத்தன்.. அந்த காட்சியை ஷேர் செய்து ரசிகர்கள் அஞ்சலி!

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் மறைந்த மூத்த நடிகர் பிரதாப் போத்தன்.

Recommended Video

Prathap pothen Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

நடிகர் ரஜினி உடன் இணைந்து தில்லு முல்லு மற்றும் நன்றி, மீண்டும் வருக உள்ளிட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.

நன்றி, மீண்டும் வருக! படத்தில் ரஜினியை அவர் தூக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்தார் பிரதாப் போத்தன்

மறைந்தார் பிரதாப் போத்தன்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும், எழுத்தாளராகவும் ஏகப்பட்ட நல்ல படைப்புகளை கொடுத்து வந்த மூத்த நடிகர் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவு காரணமாக காலமான செய்தி ஒட்டுமொத்த திரைத் துறையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி உடன்

ரஜினி உடன்

நடிகர் பிரதாப் போத்தன் ரஜினி உடன் தில்லு முல்லு மற்றும் நன்றி, மீண்டும் வருக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரதாப் போத்தன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த அந்த பிரபலமான காட்சியை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த படத்தில் ரஜினி என்கிற பெயரிலேயே ரஜினிகாந்த் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை தூக்கி

ரஜினியை தூக்கி

அந்த வீடியோவில் நடிகர் பிரதாப் போத்தன், வாழ்க்கையில் முன்னேறணும் ரஜினி, மேல வரணும் என கேட்க, உடனே அதற்கு ரஜினி என்னை தூக்க முடியுமா? என கேட்டதும், சற்றும் யோசிக்காமல் ரஜினியை அலேக்காக தூக்கி விடுகிறார் பிரதாப் போத்தன். 160 பவுண்டை தூக்கிட்ட, 140 பவுண்ட் எடையை உன்னால் தூக்க முடியுமா? என ரஜினி ட்விஸ்ட் வைக்க, 160 பவுண்ட் தூக்கிய என்னால் 140ஐ தூக்க முடியாதா? எங்கே 140 பவுண்ட் என கேட்க, உன்னைய நீயே தூக்கு என சொல்லும் காட்சி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

வாழ்க்கையில் முன்னேறணும்

உடனடியாக ஏதாவது ஒரு பிடிப்பு இருந்தால் அதை பிடித்துக் கொண்டு உயர்ந்து விடுவேன் என பிரதாப் போத்தன் சொல்ல, அந்த பிடிப்புத் தான் கண்ணா மேரேஜ் என ரஜினி கொடுக்கும் சூப்பர் அட்வைஸ் சீனைத் தான் தற்போது ரசிகர்கள் அதிகம் டிரெண்ட் செய்து தங்களது இறுதி அஞ்சலியை அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு சமர்பித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X