Just In
- 15 min ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 49 min ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 58 min ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 1 hr ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Sports
சென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் "பழைய" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்!
- News
கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்!
- Finance
ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தர்பார்: ரஜினிக்கு வில்லன் ஆகும் ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலர்
சென்னை: தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ப்ரதீக் பாபர் நடிக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் தர்பார். படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிக்கு வில்லன் யார் என்பது தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ராஜ் பாபர், மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டீலின் மகனும், நடிகருமான ப்ரதீக் பாபர் தான் தர்பார் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

ப்ரதீக்
தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதை உறுதி செய்துள்ளார் ப்ரதீக் பாபர். இந்த வாரமே அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இது தான் ப்ரதீக் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே ரஜினி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரதீக். அவருக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் ப்ரதீக், ஏமி இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

ரஜினி
தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நம்ம எஸ்.ஜே. சூர்யா நடிக்கக்கூடும் என்று முதலில் பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் தர்பாரில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார் ப்ரதீக்.

தலைவர்
தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்த பொங்கல் தலைவர் பொங்கல் ஆகும். தர்பார் படத்தை அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது.