கேவலமாக திட்டிய நெட்டிசன்கள்: மனைவியின் டாப்லெஸ் போட்டோவை நீக்கிய நடிகர்
மும்பை: நெட்டிசன்கள் கேவலமாக திட்டியதை அடுத்து நடிகர் ப்ரதீக் பாபர் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.
பாலிவுட் நடிகர் ப்ரதீக் பாபருக்கு கடந்த மாதம் தான் சான்யா சாகருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் அவரும், அவரின் மனைவியும் டாப்லெஸ்ஸாக இருக்கும் புகைபடத்தை ப்ரதீக்கே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

சமூக வலைதளத்தில் இப்படித் தான் மனைவியின் மானத்தை வாங்குவதா, வெட்கமே இல்லையா என்று நெட்டிசன்கள் ப்ரதீக் பாபரை வறுத்தெடுத்தனர். சீப் பப்ளிசிட்டி தேட இப்படி கேவலமான புகைப்படத்தை வெளியிடுகிறார் ப்ரதீக் என்று குற்றம் சாட்டப்பட்டது.
நெட்டிசன்கள் ஃபுல் டைமாக தன்னை கழுவிக் கழுவி ஊத்துவதை பார்த்த ப்ரதீக் அந்த டாப்லெஸ் புகைப்படத்தை நீக்கிவிட்டார். காதல் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடும் இவரெல்லாம் ஒரு கணவரா என்று நெட்டிசன்கள் திட்டியுள்ளனர்.
பாலிவுட்டில் டாப்லெஸ் எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்றாலும் சமூக வலைதளத்தில் இப்படியா நடந்து கொள்வது என்று சிலர் இன்னும் ப்ரதீக்கை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











